ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkமணிப்பூரில் கொலை செய்யப்பட்ட கிறிஸ்துவ பெண் எனப்பரவும் பிரேசில் வீடியோ!

மணிப்பூரில் கொலை செய்யப்பட்ட கிறிஸ்துவ பெண் எனப்பரவும் பிரேசில் வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: மணிப்பூரில் கொலை செய்யப்பட்ட கிறிஸ்துவ பெண்  

Fact: பரவும் வீடியோ பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்டதாகும்.

மணிப்பூரில் கொலை செய்யப்பட்ட கிறிஸ்துவ பெண் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“ஒரு கிறிஸ்தவ பெண்ணை RSS கும்பல் கொடூரமாக கொலை செய்யும் வீடியோ” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

மணிப்பூரில்
Screenshot from Facebook/s.jaffar.sadiq.1

Facebook Link (Trigger Warning: Disturbing visuals in post)

மணிப்பூரில்
Screenshot From Twitter @KadalTamilvanan

Twitter Link(Trigger Warning: Disturbing visuals in post)

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ‘நரக பேருந்து நிலையம்’ என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததா கோவை மாநகராட்சி?

Fact Check/Verification

மணிப்பூரில் கொலை செய்யப்பட்ட கிறிஸ்துவ பெண் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் இமேஜ் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகியிருந்த “Teen girl brutally murdered with pickaxe in Brazil” என்கிற Hoodside கட்டுரை நமக்குக் கிடைத்தது. அதில், பரவும் வீடியோ காட்சி பிரேசிலில் நடைபெற்றது என்று செய்தி தெளிவாக இடம்பெற்றுள்ளது.

மேலும், நம்முடைய தேடலில் அந்த வீடியோவில் இருப்பவர் Thália Torres de Souza என்கிற பெயர் கொண்ட பெண் என்பதும் அவர் அணிந்திருப்பது Fortaleza Esporte Clube என்கிற பிரேசிலிய கால்பந்தாட்டக்குழுவின் அதிகாரப்பூர்வ ஜெர்சி என்பதும், இந்த சம்பவம் நடைபெற்றது பிரேசிலில் என்பதும் sobralagora வெளியிட்டிருந்த கட்டுரை மூலமாக உறுதியாகியது.

கடந்த 2020ஆம் ஆண்டு முதலே இந்தியாவில் நடைபெற்ற சம்பவம் என்று இந்த வீடியோ வைரலாகிய நிலையில் இதுகுறித்த உண்மையறியும் சோதனையை நியூஸ்செக்கர் இந்தியில் 2020ஆம் ஆண்டே வெளியிட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்றாரா ஜெயக்குமார்?

Conclusion

மணிப்பூரில் கொலை செய்யப்பட்ட கிறிஸ்துவ பெண் என்று பரவும் வீடியோ பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்டடது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
News Report From, Hoodsite, Dated August 29, 2020
News Report From, Sobralagora


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular