Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை என்றார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.
Fact: வைரலாகும் வீடியோ நான்கு வருடங்களுக்கு முந்திய பழைய வீடியோவாகும்.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 21 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் பட்டியல் கொடுக்க உள்ளதாக செய்தி ஒன்று ஊடகங்களில் வந்த நிலையில், காங்கிரஸ் இத்தகவலை மறுத்துள்ளது.
இந்நிலையில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை என்று திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி ராமரைப் பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்
இத்தேடலில் “காங்கிரஸ் போனா திமுகவுக்கு என்ன நஷ்டம்: துரைமுருகன்” என்று குறிப்பிட்டு ஜனவரி 15, 2020 அன்று புதிய தலைமுறையின் யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவின் 01:49 நேரத்தில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் பகுதி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் உள்ளாட்சி தேர்தல்களில் திமுகவின் செயல் கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் – திமுக கட்சிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டிருந்த நிலையில் துரைமுருகனிடம் காங்கிரஸ் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் துரைமுருகன் அவ்வாறாக பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி திமுகவுடன் சமரசமாகி 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் வைரலாகும் வீடியோ நான்கு ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோ என்பதும், அதற்கும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தெளிவாகின்றது.
Also Read: ராமர் கோவில் திறப்பு விழாவில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் பழைய வீடியோ!
Conclusion
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதாக பரவும் வீடியோ பழைய வீடியோ என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report from Puthiya Thalaimurai, Dated Jan 15, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.