செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact Checkஉங்கள் பிச்சை ஓட்டு தேவையில்லை என்றாரா தேனி அதிமுக வேட்பாளர்?

உங்கள் பிச்சை ஓட்டு தேவையில்லை என்றாரா தேனி அதிமுக வேட்பாளர்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பெண்களை தகாத வார்த்தையில் திட்டியடி உங்கள் பிச்சை ஓட்டு தேவையில்லை என்றார்.

Fact: வைரலாகும் இத்தகவல் தவறானது என்று அதிமுக தரப்பும் பாலிமர் நியூஸ் தரப்பும் தெளிவு செய்துள்ளது.

“தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை பெண்கள் சூழ்ந்து கேள்வி கேட்டதால் கோபமடைந்த அவர், பெண்களை தகாத வார்த்தையில் திட்டியபடி “உங்க பிச்ச ஓட்டு எனக்கு தேவை இல்ல” என சொன்னதால் பெண்கள் அதிர்ச்சி” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உங்கள் பிச்சை ஓட்டு தேவையில்லை என்று தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

X Link | Archive Link

உங்கள் பிச்சை ஓட்டு தேவையில்லை என்று தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

Archive Link

உங்கள் பிச்சை ஓட்டு தேவையில்லை என்று தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Fact Check/Verification

உங்கள் பிச்சை ஓட்டு தேவையில்லை என்று தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. இவ்வாறு அவர் தெரிவிக்கவே இல்லை” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது பாலிமர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் பாலிமர் நியூஸ் இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.

இதனையடுத்து பாலிமர் நியூஸின் ஆசிரியர் சுரேந்தரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை பாலிமர் நியூஸ் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

இதனையடுத்து தேடுகையில் பாலிமர் நியூஸின் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் இச்செய்தி பொய்யானது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது.

 Also Read: அம்பத்தூர் தொழிற்பேட்டையை விட அயோத்தி ராமர் கோவிலில் அதிக வருமானம் வருகின்றது என்றாரா நிர்மலா சீதாராமன்?

Conclusion

உங்கள் பிச்சை ஓட்டு தேவையில்லை என்று தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from Polimer News, Dated April 13, 2024
Phone conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK
Phone Conversation with Surendhar, Editor, Polimer News

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular