வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Check2026ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றாரா அண்ணாமலை?

2026ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: 2026ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றார் அண்ணாமலை.

Fact: இத்தகவல் தவறானதாகும். உண்மையில், இதுவரை அரசு வேலையே கிடைக்காத குடும்பங்களில் இருப்பவர்களுக்கே அரசு வேலை தரப்படும் என்றே அண்ணாமலை கூறினார்.

2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை கூறியதாக சன் நியூஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

2026ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக பரவிய செய்தி

X Link | Archived Link

இதனையடுத்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இச்செய்தியை அடிப்படையாக வைத்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, “ஒரு ஒப்பீட்டுக்கு– தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்… BJP கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று….அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம்! அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா?

2026ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக பரவிய செய்தி

X Link | Archived Link

இதேபோல் பலரும் இச்செய்தி குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

2026ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக பரவிய செய்தி

Facebook Link

2026ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக பரவிய செய்தி

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக ஆட்சியில் குறைந்த பின் சக்கரங்களுடன் ஓடும் அரசு பேருந்து எனப் பரவும் 2019ஆம் ஆண்டு வீடியோ!

Fact Check/Verification

2026ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, அண்ணாமலை இவ்வாறு கூறினாரா என்பது குறித்து தேடினோம்.

இத்தேடலில் “ 2026-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசு வேலை” அடித்து சொன்ன Annamalai! யார் யாருக்கெல்லாம் தெரியுமா?” என்று தலைப்பிட்டு பிஹைண்ட்வுட் ஏரில் வீடியோ ஒன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அவ்வீடியோவில் தமிழ்நாட்டில் 2026ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் இதுவரை எந்த குடும்பத்தில் ஒரு தலைமுறைக்கு கூட அரசு வேலை கிடைக்கவில்லையோ அவர்களுக்கு கட்டாயமாக அரசு வேலை கொடுக்கப்படும் என்று அண்ணாமலை பேசி இருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் அமைச்சர் பழனிவேல் ராஜனின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து அண்ணாமலை  பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில் அவரது கருத்தை சன் நியூஸ் திரித்து வெளியிட்டதை தெளிவுப்படுத்தியிருந்ததுடன் அவர் பேசிய வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில், 2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அண்ணாமலை கூறவில்லை என்பதும், இதுவரை அரசு வேலையே கிடைக்காத குடும்பங்களில் உள்ள ஒருவருக்கே அரசு வேலை வழங்கப்படும் என்றே கூறியுள்ளார் என்பதும் தெளிவாகின்றது.

Also Read: விஜய்யை கூட்டணிக்கு அழைத்தாரா சீமான்?

Conclusion

2026ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை கூறியதாக சன் நியூஸ் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Youtube Video from Behindwoods Air, Dated February 05, 2024
Tweet from Annamalai, President, Tamilandu BJP, Dated February 06, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular