திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkதிமுக ஆட்சியில் குறைந்த பின் சக்கரங்களுடன் ஓடும் அரசு பேருந்து எனப் பரவும் 2019ஆம் ஆண்டு...

திமுக ஆட்சியில் குறைந்த பின் சக்கரங்களுடன் ஓடும் அரசு பேருந்து எனப் பரவும் 2019ஆம் ஆண்டு வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: திருப்பூர் To பொள்ளாச்சி பேருந்துக்கு இரண்டு பின் சக்கரங்கள் மட்டுமே உள்ளன. திராவிட மாடலின் லட்சணம்.
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது ஆகும்.

திமுக ஆட்சியில் குறைந்த பின் சக்கரங்களுடன் ஓடும் அரசு பேருந்து என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

“உங்க அப்பன் வீட்டு காசா??பொதுமக்கள் உயிர் உங்களுக்கு லேசா?? @CMOTamilnadu பேருந்துக்கு நான்கு பின் சங்கரங்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்த திருப்பூர் To பொள்ளாச்சி பேருந்துக்கு இரண்டு பின் சக்கரங்கள் மட்டுமே உள்ளன. திராவிட மாடலின் லட்சணம்.” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X Mahi1987Mass

Archived Link

Screenshot from X Ariyanayagam2

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Fact Check/Verification

திமுக ஆட்சியில் குறைந்த பின் சக்கரங்களுடன் ஓடும் அரசு பேருந்து என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜூலை 01, 2019 அன்று யூடியூப் பக்கம் ஒன்றில் ஷேர் செய்யப்பட்டிருந்தது நமக்குத் தெரிய வந்தது. Jeno Cryspin என்கிற இந்த யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. பொள்ளாச்சி முதல் திருப்பூர் வரையில் பல்லடம் வழியாக செல்லும் இந்த அரசு பேருந்து மக்கள் உயிருக்கு ஆபத்தாக பின்புறம் நான்கு சக்கரங்களுக்கு பதிலாக இரண்டு சக்கரங்களுடன் ஓடுவதாக பதிவிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, ஜூலை 02 ஆம் தேதியன்று Hindu Tamil வெளியிட்டிருந்த இதுகுறித்த செய்தியில் “பின்புறம் நான்கு சக்கரங்களுக்கு பதிலாக இரண்டு சக்கரங்கள் மட்டுமே கொண்டு ஓடும் அரசுப்பேருந்தின் வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து  டிஎன்எஸ்டிசி அதிகாரியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது அவர், குறிப்பிட்ட பேருந்தில் அந்த வீடியோ எடுக்கப்பட்டபோது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மட்டுமே இருந்தனர். பயன்படாத பேருந்துகளை நிறுத்தும் பேருந்து முனையத்திற்கு மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோதே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்றார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி DTNext இதழிலும் வெளியாகியுள்ளது. எனவே, இதன்மூலம் குறிப்பிட்ட வீடியோ எடுக்கப்பட்டது அதிமுக ஆட்சி காலகட்டமான 2019ஆம் ஆண்டில் என்பது உறுதியாகிறது.

Also Read: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றாரா பிரசாந்த் கிஷோர்?

Conclusion

திமுக ஆட்சியில் குறைந்த பின் சக்கரங்களுடன் ஓடும் அரசு பேருந்து என்று பரவும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube Video from Jeno Cryspin , Dated July 01, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular