Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: திமுக கூட்டணி 39 தொகுதியிலும் வெற்றி பெறும்.
Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.
திமுக கூட்டணி வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கணித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
Fact Check/Verification
திமுக கூட்டணி வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய டைம்ஸ் நவ் வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பு வீடியோவை ஆராய்ந்தோம். அதில், இந்தியா கூட்டணி 36 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும், அஇஅதிமுக 2 இடங்கள் மற்றும் இதர கட்சிகள் – 0 இடங்களையும் வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி ஜெயிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ள இடங்களை எடிட் செய்து 39 இடங்களிலும் திமுக கூட்டணி வெல்லும் என்பதாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகியது.
Also Read: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றாரா பிரசாந்த் கிஷோர்?
Conclusion
திமுக கூட்டணி வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
X Post from Times Now, Dated February 07, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.