Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: 2024ஆம் ஆண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
Fact: வைரலாகும் படம் போலியானதாகும். தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தேதியும் அறிவிக்கவில்லை.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேதி ஏப்ரல் 19 என்று அறிவிக்கப்பட்டதாகப் புகைப்பட தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“தேர்தல் தேதி அறிவிக்க பட்டது.
12.03.2024 தேர்தல் தேதி அறிவிப்பு.
28.03.2024 நாமினேஷன்.
19.04.2024 தேர்தல் நாள்.
22.05.2024 வாக்கு எண்ணிக்கை.
30.05.2024 புதிய அரசு பதவி ஏற்பு.” என்று இந்த புகைப்படத்தகவல் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டாரா?
Fact Check/Verification
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேதி ஏப்ரல் 19 என்று அறிவிக்கப்பட்டதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் எந்தவித அறிவிப்பும் இடம்பெற்றிருக்கவில்லை.
மேலும், கடந்த பிப்ரவரி 24, 2024 அன்று தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து பரவும் செய்தி போலியானது” என்று விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
எனவே, தேர்தல் தேதி குறித்து பரவும் தகவல் போலியானது என்பது இதன்மூலம் உறுதியாகிறது.
Also Read: பிரதமர் மோடியை விமர்சித்ததால் சுட்டுக்கொல்லப்பட்ட மணிப்பூர் சிறுமி என்று பரவும் மியான்மர் வீடியோ!
Conclusion
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேதி ஏப்ரல் 19 என்று அறிவிக்கப்பட்டதாகப் பரவும் தகவல் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Tweet from Election Commission of India, Dated February 24, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.