சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Check‘மோடி சுட்ட வடைகள்’ எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தினாரா?

‘மோடி சுட்ட வடைகள்’ எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மோடி சுட்ட வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தினார்.

Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையில் அந்த டீ-சர்ட்டில் ‘ஐ அம் மோடி’ என்ற வாசகமே இடம்பெற்றிருந்தது.

மோடி சுட்ட வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விளம்பரப்படுத்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அப்படத்தில் அண்ணாமலையுடன் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவும் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

மோடி சுட்ட வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம்

X Link | Archive Link

மோடி சுட்ட வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம்

Archive Link

மோடி சுட்ட வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டாரா?

Fact Check/Verification

மோடி சுட்ட வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தியதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில்  ‘I’m #Modi !’ என்று தலைப்பிட்டு எஸ்.ஜி.சூர்யா வைரலாகும் இப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் நேற்றைய முன்தினம் (மார்ச் 06) பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் அப்படத்தில் அண்ணாமலை வைத்திருந்த டீ-சர்ட்டில் மோடி சுட்ட வடைகள் என்கிற வாசகம் இடம்பெற்றிருக்கவில்லை; ஐ அம் மோடி (I’m #Modi) எனும் வாசகம் பிரதமர் மோடி படத்துடன் இடம்பெற்றிருந்தது.

மோடி சுட்ட வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம்

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகின்றது.  வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு பேசுகையில், அவரும் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்று உறுதி செய்தார்.   

Also Read: பிரதமர் மோடியை விமர்சித்ததால் சுட்டுக்கொல்லப்பட்ட மணிப்பூர் சிறுமி என்று பரவும் மியான்மர் வீடியோ!

Conclusion

மோடி சுட்ட வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from S.G.Suryah, State Secretary, Tamilnadu BJP, Dated March 06, 2024
Conversation with S.G.Suryah, State Secretary, Tamilnadu BJP

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular