Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: KT ராகவன் காலில் விழுந்த அண்ணாமலை
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். அதில் இருப்பவர் குமரகுருபர சுவாமி ஆவார்.
KT ராகவன் காலில் விழுந்த அண்ணாமலை என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”நல்ல தலைப்பு சொல்லுங்களேன். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பிற்கு சிறப்பு பரிசு உண்டு ” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்றாரா இயக்குநர் தங்கர்பச்சான்?
Fact Check/Verification
KT ராகவன் காலில் விழுந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அண்ணாமலை, சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றபோது எடுத்த புகைப்படத்தில் ராகவனை எடிட் செய்துள்ளனர் என்பது நமக்கு உறுதியாகியது.
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை குமரகுருபர சுவாமிகளுடனான சந்திப்பு புகைப்படங்களை தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தையே எடிட் செய்து அவர் கே.டி.ராகவன் காலில் விழுவதாக பரப்பி வருகின்றனர்.
Also Read: நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
Conclusion
KT ராகவன் காலில் விழுந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
X Post From, K.Annamalai, Dated March 25, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.