திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஅதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல்
Screengrab from Twitter@IndiraniSudala1
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல்
Screengrab from Facebook/Modakkuruchi Gowtham
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல்
Screengrab from Facebook/கும்மாயம்பட்டி வடிவேல்

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழக மீனவர்கள்தான் போதைப் பொருள் கடத்தல் செய்திருப்பார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

Factcheck / Verification

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் கருத்துக்கணிப்பு புகைப்படத்தை உற்றுநோக்கியதில், அதில் திமுக 32 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் இந்த தேர்தலில் திமுக போட்டியிடவே இல்லை, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகின்றது. அதேபோல் அப்படத்தில் படமோ/எழுத்தோ அழிக்கப்பட்ட தடயங்கள் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் இது போலியான புகைப்படம் என்பதை அறிய முடிந்தது

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல்

இருப்பினும்  இதை பலர் உண்மை என்று பகிர்ந்து வருவதால் இதை முறையாக ஆய்வு செய்து விளக்க முடிவு செய்தோம். முன்னதாக தந்தி தொலைக்காட்சி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து சமீபத்தில் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா என தேடினோம்.

இதில் தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. இதைனையடுத்து தந்தி தொலைக்காட்சியின்  டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம்.

இதற்கு அவர், “இது போலியான புகைப்படம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து சமீபத்தில் நாங்கள் எந்த கருத்துக்கணிப்பும் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார்.

Also Read: ஜப்பான் தெருக்களில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூடியதாக பரவும் தவறான தகவல்!

Conclusion

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Phone Conversation with Vinothkumar, Thanthi TV, dated February 20, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular