Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் உணவுகள் வழங்கப்பட்டது.
Fact: வைரலாகும் வீடியோவில் அதிமுகவினர் உணவு உண்ணும் படம் 2018 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று (27/06/2024) நடைப்பெற்றது.
இப்போரட்டத்தில் அதிமுகவினருக்கு உணவுகள் வழங்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் உணவுகள் வழங்கப்பட்டதாக பரவும் வீடியோவைவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் “AIADMK hunger strike Troll : உண்ணும் விரதம் : வைரல் போட்டோஸ்” என்று தலைப்பிட்டு வைரலாகும் இவ்வீடியோவை தினமலர் அதன் யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. இவ்வீடியோவானது ஏப்ரல் 03, 2018 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து இதுக்குறித்து தேடியதில் இந்தியன் எக்ஸ்பிரஸிலும் வைரலாகும் படம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை ஏற்படுத்த மத்திய அரசு கால தாமதப்படுத்தியதால் 2018-ல் ஆட்சி பொறுப்பில் இருந்த அதிமுக ஒருநாள் உண்ணாவிரதம் இருந்ததாகவும், இந்த போராட்டத்தின்போது தொண்டர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு ஆறு ஆண்டுகளுக்கு முந்திய பழைய நிகழ்வு என்பதும், அந்நிகழ்வுக்கும் நேற்றைய உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெளிவாகின்றது.
Also Read: ‘சாராய வியாபாரி ஸ்டாலின்’ என்று அட்டைப்படம் வெளியிட்டதா ஆனந்த விகடன்?
Conclusion
அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் உணவுகள் வழங்கப்பட்டதாக பரவும் வீடியோ 2018 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். வைரலாகும் வீடியோவுக்கும் நேற்றைய உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இந்த உண்மையை உரிய ஆதாரங்கள் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
Report from Dinamalar, Dated April 03, 2018
Report from Indian Express, Dated April 04, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.