ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkபிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க யாரும் வரவில்லையா?

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க யாரும் வரவில்லையா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க யாரும் வரவில்லை

Fact: பிரெஞ்சு பிரதமர் எலிசபெத் போர்னே விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றார். இதை தொடர்ந்து அவருக்கு பிரெஞ்சு முறைப்படி இராணுவ வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க யாரும் வரவில்லை என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க யாரும் வரவில்லை என்று பரவும் தகவல்
Screengrab from Twitter@ethisundar

Twitter Link | Archived Link

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க யாரும் வரவில்லை என்று பரவும் தகவல்
Screengrab from Facebook/raja84hussain

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: இளம்பெண்ணுடன் நடனமாடிய பாதிரியார் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க யாரும் வரவில்லை என்று கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக வைரலாகும் வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து தேடுகையில், பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ‘பிரெஞ்சு பிரதமர் எலிசபெத் போர்னே விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றதாக’ குறிப்பிட்டு ஷார்ட்ஸ் வீடியோவாக இவ்வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து “PM Modi arrives to a ceremonial welcome in Paris, France | PM Modi France visit 2023” என தலைப்பிட்டு மற்றொரு வீடியோவும் பிரதமரின் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

இவ்வீடியோவில் பிரதமர் மோடி விமானத்திலிருந்து இறங்கி வந்தப்பின் பிரெஞ்சு பிரதமர் எலிசபெத் போர்னே அவரை வரவேற்பதையும், இதனைத் தொடர்ந்து பிரதமருக்கு பிரெஞ்சு முறைப்படி இராணுவ வரவேற்பு அளிக்கப்படுவதையும் காண முடிந்தது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸின் மற்ற முக்கியஸ்தர்கள் பிரதமரை வரவேற்பதையும் காண முடிந்தது. 

தொடர்ந்து தேடுகையில் இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ யூடியூப் கணக்கிலும் எலிசபெத் போர்னே மோடியை வரவேற்றது குறித்தும், அதை தொடர்ந்து அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு குறித்தும் புகைப்படங்களுடன் டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் பிரதமரை பிரான்ஸில் யாரும் வரவேற்கவில்லை என்று பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பதும், அவர் முறையாக வரவேற்கப்பட்டார் என்பதும் தெளிவாகின்றது.

Also Read: சந்திரயான்-3 வெற்றிக்கு கடவுள் வெங்கடாசலபதியே காரணம் என்றாரா நாராயணன் திருப்பதி?

Conclusion

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க யாரும் வரவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானத் தகவல் என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Youtube Video from Narendra Modi, Dated July 13, 2023
Youtube Shorts Video from Narendra Modi

Tweet from PMO India, Dated July 13, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular