சனிக்கிழமை, ஜூலை 27, 2024
சனிக்கிழமை, ஜூலை 27, 2024

HomeFact Checkமின் கட்டண உயர்வை கண்டு கொதித்தெழுந்தாரா ஊடகவியலாளர் செந்தில்வேல்?

மின் கட்டண உயர்வை கண்டு கொதித்தெழுந்தாரா ஊடகவியலாளர் செந்தில்வேல்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழ்நாட்டின் மின் கட்டண உயர்வை கண்டு கொதித்தெழுந்தார் ஊடகவியலாளர் செந்தில்வேல்.

Fact: வைரலாகும் வீடியோ ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் வெளியிடப்பட்டதாகும். மணிப்பூர் கலவரம் குறித்து செந்தில்வேல் வெளியிட்ட வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.

தமிழகத்தில் 2024 ஆண்டிற்கான மின்சார கட்டண திருத்தம்  ஜூலை 1 ஆம் தேதி முதல் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி தமிழகத்தில் மின்கட்டணமானது உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ‘திராவிட மாடல் திமுக அரசு மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியதை கண்டு கொதித்து எழுந்த திமுக முட்டு அண்டா சீப்பு செந்தில்’ என்று குறிப்பிட்டு  வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அவ்வீடியோவில் “சத்தியமா சொல்றேங்க. வயிறெரிஞ்சு  சொல்றேன், நீங்கெல்லாம் நல்லா இருக்க மாட்டீங்கடா. அவ்வளவு ஆத்திர கோவம் வருது. டிவியை போட்டவுடன் கிடைத்த முதல் செய்தியே இருக்குல்ல, அப்படியே கண்ணுல இரத்தத்த வச்சுது. நெஞ்சு பதபதைக்குது” என்று செந்தில்வேல் பேசி இருப்பதை காண முடிந்தது.   

தமிழ்நாட்டின் மின் கட்டண உயர்வை கண்டு கொதித்தெழுந்தார் ஊடகவியலாளர் செந்தில்வேல்.

X Link | Archive Link

தமிழ்நாட்டின் மின் கட்டண உயர்வை கண்டு கொதித்தெழுந்தார் ஊடகவியலாளர் செந்தில்வேல்.

Archive Link

தமிழ்நாட்டின் மின் கட்டண உயர்வை கண்டு கொதித்தெழுந்தார் ஊடகவியலாளர் செந்தில்வேல்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஆம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

Fact Check/Verification

தமிழ்நாட்டின் மின் கட்டண உயர்வை கண்டு ஊடகவியலாளர் செந்தில்வேல் கொதித்தெழுந்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவரது சொந்த யூடியூப் பக்கமான தமிழ்கேள்வி யூடியூப் பக்கத்தில் இவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து எந்த ஒரு வீடியோவும் தமிழ்கேள்வி யூடியூப் பக்கத்தில் வெளிவந்திருக்கவில்லை என அறிய முடிந்தது.

இதனை தொடர்ந்து வைரலாகும் வீடியோ குறித்து தேடுகையில் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு ஜூலை 20, 2023 அன்று“சீ இப்படியா பண்ணுவீங்க வயிறெரிஞ்சி சொல்றேன் நீங்க எல்லாம் நாசமாத்தான் போவீங்க.|| செந்தில்வேல் வீச்சு” என்று தலைப்பிட்டு தமிழ் கேள்வி யூடியூப் பக்கத்தில் வீடியோ பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

அவ்வீடியோவின் தொடக்கத்தில், “சத்தியமா சொல்றேங்க. வயிறெரிஞ்சு  சொல்றேன், நீங்கெல்லாம் நல்லா இருக்க மாட்டீங்கடா. அவ்வளவு ஆத்திர கோவம் வருது. இந்தியா வந்து இறங்கி….. டிவியை போட்டவுடன் கிடைத்த முதல் செய்தியே இருக்குல்ல, அப்படியே கண்ணுல இரத்தத்த வச்சுது. நெஞ்சு பதபதைக்குது. மணிப்பூர்ல 2 பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி, தெருத்தெருவா அடிச்சு இழுத்து வந்து, பொதுமக்கள் முன்னிலையில் பாலியல் வல்லுறவு செய்திருக்கிறார்கள். டேய் நாடு எங்கடா போயிட்டிருக்கு…” என்று செந்தில்வேல் பேசி  இருப்பதை காண முடிந்தது.

இதன்படி பார்க்கையில் மணிப்பூர் பிரச்சனை குறித்து செந்தில்வேல் பேசிய இந்த வீடியோவில் ‘இந்தியா வந்து இறங்கி…..’ என்று பேசும் பகுதியை எடிட் செய்து நீக்கி, மணிப்பூர் குறித்து அவர் பேச தொடங்கும்போது வீடியோவை முடித்து, அவர் மின்கட்டண உயர்வு குறித்து பேசியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.

தொடர்ந்து வைரலாகும் வீடியோவில் செந்தில்வேலுக்கு பின்னால் பாலிமர் நியூஸ் வீடியோ ஒன்று ஓடுவதாக பொய்யாக இணைத்திருப்பதை காண முடிந்தது.

தமிழ்நாட்டின் மின் கட்டண உயர்வை கண்டு கொதித்தெழுந்தார் ஊடகவியலாளர் செந்தில்வேல்.
தமிழ்நாட்டின் மின் கட்டண உயர்வை கண்டு கொதித்தெழுந்தார் ஊடகவியலாளர் செந்தில்வேல்.

பொய்யாக இணைக்கப்பட்ட அந்த வீடியோவில் காணப்படும் அச்செய்தியானது நவம்பர் 03, 2023 அன்று பாலிமர் நியூஸில் வெளிவந்தது என நம் ஆய்வின் மூலம் தெரிய வந்தது.

தமிழ்நாட்டின் மின் கட்டண உயர்வை கண்டு கொதித்தெழுந்தார் ஊடகவியலாளர் செந்தில்வேல்.

  Also Read: டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததா?

Conclusion

மணிப்பூர் பிரச்சனை குறித்து செந்தில்வேல் பேசிய வீடியோவை ஆங்காங்கே எடிட் செய்து தமிழ்நாட்டின் மின் கட்டண உயர்வை கண்டு அவர் கொதித்தெழுந்ததாக தவறான தகவல் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Our Sources
Youtube Video from Tamil Kelvi, Dated July 20, 2023
Youtube Video from Polimer News, Dated November 03, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular