வெள்ளிக்கிழமை, அக்டோபர் 4, 2024
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 4, 2024

HomeFact Checkகொரானாவிற்கு பின் உலகை அச்சுறுத்த வரும் அடுத்த ஆபத்து?

கொரானாவிற்கு பின் உலகை அச்சுறுத்த வரும் அடுத்த ஆபத்து?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

வந்தச் செய்தி

(Bubonic plague Outbreak in China Called “BLACK DEATH “

(New Virus2020)

A highly contagious and fatal disease confirmed in China and can trigger severe epidemic according to WHO.

Bubonic plague is airborne and can be spread when an infected person coughs.)

கறுப்பு மரணம் என்று அழைக்கப்படும் நிணநீர் அமைப்பை பாதிக்கக் கூடிய  பூபோனிக் பிளேக் நோய் சீனாவில் தற்போது பரவி வருகிறது. இது புதிய வகை வைரஸ் காற்றின் மூலமாகப் பரவுகிறது.  

சரிப்பார்ப்பு:

அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய பயங்கரமான நோய் சீனாவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது என்று சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவியது.

மேலும், இந்த நோயானது காற்றில் மூலம் பரவக் கூடியது. நோயுற்ற ஒருவர் தும்மும்போதோ அல்லது இருமும்போதோ இந்நோய் மற்றவர்க்கு  பரவும் என்றும் பரப்பப்பட்டது.  

இந்நோயால் பாதிக்கப்பட்டவர் என்று ஒரு நபரின் புகைப்படமும் பரப்பப்பட்டது.

பூபோனிக் பிளேக்கால் பாதிக்கப்பட்ட நபர் என பரப்பப்படும் புகைப்படம்…

ஆகவே இதன் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.

உண்மைத் தன்மை:

மேலே கூறிய செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து ஆராய, ‘பிளாக் டெத்’ என்ற கீவேர்டைப் பயன்படுத்தி கூகுளில் ஆராய்ந்தோம்.

அதில் நமக்கு பல புதிய விவரங்கள் கிடைத்தது.

‘கறுப்பு மரணம்’ குறித்து தினகரனில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதில் சீனாவின் மங்கோலியாப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தது.

நியூஸ்18 தமிழிலும் இதுக் குறித்த செய்தி வெளியாயிருந்தது.

இந்நோய் பரவக் காரணம் என்ன?

இந்நோய் எர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலம் பரவக் கூடியது. இந்நோய் பாதித்த 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படக் கூடும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆகவே, இந்நோயானது காற்றின் மூலம் பரவக்கூடிய வைரஸ் மூலம் பரவக்கூடியது எனும் கூற்றுத் தவறானது என்று தெளிவாகிறது.

அதேபோல், நோய் பாதித்ததாக கூறப்பட்டு பகிரப்பட்ட நபரின் படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்தபோது அது பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட நபரின் மெழுகுச் சிலையேயன்றி உண்மையான நபரின் புகைப்படம் அல்ல என்ற உண்மை நமக்குத் தெரிய வந்தது.

உலக சுகாதார மையத்தின் கூற்றுப்படி, 24 மணிநேரத்திற்குள் சரியான மருத்துவம் அளித்தால் இந்நோயை சரி செய்ய இயலும் என்றும் கொரானாபோல் இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தாது என்றும் தெளிவாகிறது.

முடிவு:

நம் விரிவான ஆய்வுக்குப் பின் இந்த பிளேக் புதிய வகை வைரஸால் பரவக் கூடியது எனும் கூற்றும், அது காற்றின் மூலம் பரவும் எனும் கூற்றும், இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனும் கூற்றும் தவறானது என்று தெளிவாகிறது.

Sources:

  • Google search
  • Facebook 

Result: False

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம் அல்லது எங்கள் இணையத்தளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular