ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 1, 2024
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 1, 2024

HomeFact Checkஅக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் புகைப்படம்!

அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: அக்‌ஷய் குமாருடன் குறைவான உடையில் ஜோதிகா

Fact: இப்புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டு பரவி வருகிறது.

அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஜோதிகா என்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

“அப்போ நாலடியார் வாழ்க்கை” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

Screenshot from x @LawAcademics

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி தரையில் விழுந்தாரா?

Fact Check/Verification

அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஜோதிகா என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த புகைப்படம் குறித்து ”PHOTO: Jyotika pens heartfelt note for Akshay Kumar, recalls having his poster in her room” என்று PinkVilla வெளியிட்டிருந்த கட்டுரை கிடைத்தது. அதில், அக்‌ஷய் குமாருடன் ஜோதிகா எடுத்துக்கொண்ட புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

ஜோதிகா அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் ”உங்களுடைய ஃபேன் கேர்ள்-ஆக பெட்ரூமில் புகைப்படம் ஒட்டி வைத்ததில் இருந்து தற்போது உங்கள் 150வது படத்தின் தயாரிப்பாளராகிய என் வாழ்வின் அருமையான தருணம்” என்பதாக பதிவிட்டிருந்தார். அதில், அக்‌ஷய் குமாருடன் இணைந்து புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

Instagram will load in the frontend.

குறிப்பிட்ட புகைப்படத்தை எடுத்து எடிட் செய்து ஜோதிகா குறைந்த உடை அணிந்துள்ளதாக பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் புகைப்படத்திலேயே அப்புகைப்படம் MintAI மூலமாக எடிட் செய்யப்பட்டுள்ளதாக வாட்டர்மார்க்கும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Also Read: வங்கதேசத்தில் இந்துக்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகப் பரவும் பீகார் வீடியோ!

Conclusion

அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஜோதிகா என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Instagram Post from, Jyotika, Dated July 11, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular