Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: பங்களாதேஷ் இந்து பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை
Fact: வைரலாகும் வீடியோ உத்தரபிரதேசம் ஹத்ராஸில் நடைபெற்றதாகும்.
பங்களாதேஷில் இந்துப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”பங்களாதேஷ் இந்து பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதா இந்தியா?
Fact Check/Verification
பங்களாதேஷில் இந்துப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜூலை 03 அன்று ஹத்ராஸில் நடந்த சம்பவம் என்கிற தலைப்பில் வைரல் வீடியோ யூடியூப் பக்கம் ஒன்றில் பகிரப்பட்டிருந்தது.
தொடர்ந்து, அதன் கீ-ப்ரேம்கள் மூலமாகத் தேடியபோது India today, News 18 ஆகிய செய்தி ஊடகங்களில் வெளியாகிய புகைப்படங்களுடன் இந்த வீடியோ காட்சிகள் ஒத்துப்போவதைக் கண்டறிய முடிந்தது.
மேலும், Spark Media பகிர்ந்திருந்த வீடியோ காட்சிகளும், இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் ஒன்றே என்பதையும் நம்மால் அறிய முடிந்தது. குறிப்பிட்ட ஹத்ராஸ் நிகழ்வு வீடியோவே தற்போது வங்க தேசத்தில் இந்து பெண்களின் நிலைமை என்பதாகப் பரவி வருகிறது என்பது உறுதியாகியது.
Also Read: அக்ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் புகைப்படம்!
Conclusion
பங்களாதேஷில் இந்துப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை என்று பரவும் வீடியோ உத்தரபிரதேசம் ஹத்ராஸ் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட சோக நிகழ்வில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report from, India Today, Dated July 05, 2024
Report from, News 18, Dated July 02, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.