வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024

HomeFact CheckGOAT படம் புரியவே இல்லை என்று விஜய் ரசிகர் புலம்பியதாக பரவும் தவறான வீடியோ!

GOAT படம் புரியவே இல்லை என்று விஜய் ரசிகர் புலம்பியதாக பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: GOAT படம் புரியவே இல்லை என்று விஜய் ரசிகர் புலம்பல்.

Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் ரசிகர் விமர்சனம் தங்கலான் திரைப்படத்திற்கு தரப்பட்டதாகும். 

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த GOAT திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படம் குறித்த விமர்சனங்களை
சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து வரும் நிலையில், “படம் புரியவே இல்லை” என்று விஜய் ரசிகர் ஒருவர் புலம்பியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

GOAT படம் புரியவே இல்லை என்று விஜய் ரசிகர் புலம்பல்

X Link | Archive Link

GOAT படம் புரியவே இல்லை என்று விஜய் ரசிகர் புலம்பல்

Archive Link

GOAT படம் புரியவே இல்லை என்று விஜய் ரசிகர் புலம்பல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

GOAT படம் புரியவே இல்லை என்று விஜய் ரசிகர் புலம்பியதாக பரப்பப்படும் வீடியோவில் ‘SS buzz’ எனும் யூடியூப் பக்கத்தின் லோகோ இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து அந்த யூடியூப் பக்கத்தில் தேடியபோது தங்கலான் திரைப்படத்திற்கு பொதுமக்கள் விமர்சனம் தந்த வீடியோவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நபர் தங்கலான் படம் புரியவில்லை என்று (03:22 நேரத்தில்) பேசி இருப்பதை காண முடிந்தது.

GOAT படம் புரியவே இல்லை என்று விஜய் ரசிகர் புலம்பல்

இதனடிப்படையில் பார்க்கையில் தங்கலான் படத்திற்கு தரப்பட்ட விமர்சனத்தை GOAT திரைப்படத்திற்கு தந்ததாக பொய்யாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.

 Also Read: சென்னையில் நடைபெற்ற F4 கார் ரேஸில் கலந்து கொண்டாரா நடிகை நிவேதா பெத்துராஜ்?

Conclusion

GOAT படம் புரியவே இல்லை என்று விஜய் ரசிகர் புலம்பியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அந்த விமர்சனமானது தங்கலான் திரைப்படத்திற்கு தரப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Youtube Video from SS Buzz

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular