வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024
வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024

HomeFact Checkசர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள்

Fact: வைரலாகும் புகைப்படம் படேல் சிலை கட்டுமானம் நடைபெற்றபோது எடுக்கப்பட்டதாகும்.

சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”பீசேபீ சாதனை..3,000 கோடி சிலையில் அடியில் விரிசல்கள். விழுந்தால் 3000 கோடி அம்போ” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @Ilamparith94464

X Link/Archived Link

Screenshot from X @Pugal0405gmail4

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த நவம்பர் 01, 2018 அன்று LAtimes வெளியிட்டிருந்த “India’s Statue of Unity may be the world’s tallest, but its remote location makes it hard to get to” என்கிற தலைப்பில் இடம்பெற்ற கட்டுரையில் தற்போது வைரலாகும் புகைப்படம் இடம்பெற்றுள்ளதைக் காண முடிந்தது.

கடந்த அக்டோபர் 2018ஆம் ஆண்டு படேல் சிலையின் பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திவ்யகாந்த் சோலெங்கி என்கிற புகைப்படக்கலைஞர் இப்புகைப்படங்களை புகைப்படத்தொகுப்பு நிறுவனங்களுக்காக எடுத்திருப்பதை நம்மால் காண முடிந்தது.

மேலும், PIB தரப்பிலும் வைரலாகும் புகைப்படங்கள் படேல் சிலை கட்டமைப்பின்போது எடுக்கப்பட்டவை; அச்சிலையில் தற்போது விரிசல்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 Also Read: சென்னையில் நடைபெற்ற F4 கார் ரேஸில் கலந்து கொண்டாரா நடிகை நிவேதா பெத்துராஜ்?

Conclusion

சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் என்று பரவும் புகைப்படம் அந்த சிலையின் கட்டுமானப் பணியின்போது எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report From, LATimes, Dated November 01, 2018
Twitter Post From, PIB, Dated September 09, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular