செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

HomeFact Checkஇஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கினாரா உதயநிதி ஸ்டாலின்?

இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கினாரா உதயநிதி ஸ்டாலின்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Fact: திமுகவின் பவள விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. உதயநிதி வழங்கியது பட்டாசு அல்ல; மின் அடுப்பாகும்.

“முஸ்லிம்களுக்கும் தீபாவளிக்கும் என்னடா சம்பந்தம்..? சனாதனத்தை ஒழிக்க முஸ்லிம்களுக்கு தீபாவளி பட்டாசு – பரிசு வழங்கிய ஓங்கோல் இளவரசர்..!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

X Link | Archive Link

இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Archive Link

இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சால்வை போட வந்தவரிடம் ‘நிதி கொண்டு வந்தாயா’ என கேட்டாரா சீமான்?

Fact Check/Verification

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கியதாக பரவும் வீடியோவில் ANI-யின் லோகோ இடம்பெற்றிருந்ததால் அந்த ஊடகத்தின் சமூக ஊடகப் பங்கங்களில் அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் திமுகவின் 75 ஆம் ஆண்டு நிறைவை  முன்னிட்டு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்டங்கள் வழங்கியதாக கூறி ANI எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் வீடியோ பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்பதிவானது அக்டோபர் 23, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்தது.

இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ANI எக்ஸ் பதிவு

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் இதே தினத்தில் (அக்டோபர் 23, 2024) உதயநிதி ஸ்டாலினின் எக்ஸ் பக்கத்தில் திமுகவின் பவள விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டதாக கூறி படங்களுடன் பதிவுகள் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இப்பதிவுகளின்படி பார்க்கையில் உதயநிதி நலத்திட்டப் பொருட்களை வழங்கியதற்கும் தீபாவளிக்கும் எவ்வித தொடர்புமில்லை என் அறிய முடிந்தது.

இதனையடுத்து உதயநிதி வழங்கிய நலத்திட்ட பொருளை கூர்ந்து கவனிக்கையில், அதில் ‘Rapido cute Induction Cooktop’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இதன்படி பார்க்கையில் உதயநிதி வழங்கியது பட்டாசு அல்ல; மின் அடுப்பு என அறிய முடிந்தது.

இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Also Read: சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Conclusion

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

உண்மையில் திமுகவின் பவள விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டே உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட பொருட்களை வழங்கியுள்ளார்; தீபாவளிக்காக எவ்வித பரிசையும் அவர் வழங்கவில்லை. அதேபோல் அவர் வழங்கியது மின் அடுப்பாகும், பட்டாசு அல்ல.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X post from ANI, Dated October 23, 2024
X posts (1, 2, & 3) from Udhayanidhin Stalin, Deputy Chief Minister of Tamil Nadu, Dated October 23, 2024

உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular