திங்கட்கிழமை, ஜூன் 17, 2024
திங்கட்கிழமை, ஜூன் 17, 2024

HomeFact CheckFact Check: தமிழகத்தில் இந்தி பேசும் வடஇந்தியர்களை தாக்கிக் கொல்வதாக வடமாநிலங்களில் பரவும் வதந்தி!

Fact Check: தமிழகத்தில் இந்தி பேசும் வடஇந்தியர்களை தாக்கிக் கொல்வதாக வடமாநிலங்களில் பரவும் வதந்தி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
தமிழகத்தில் தமிழர்களால் தாக்கப்படும் இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள்.

Fact
வைரலான வீடியோக்கள் புலம்பெயர்ந்த வட இந்தியர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்பில்லாதவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒரு வீடியோ ராஜஸ்தானிலும், மற்றொன்று கோவை நீதிமன்ற வளாகத்திலும் நடந்த கொலைகள் ஆகும்.

தமிழகத்தில் இந்தி பேசும் வட இந்திய மக்களைத் தாக்கி கொலை செய்வதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வட மாநில மொழிகளில் பரவி வருகிறது.

”It is being told that in Tamil Nadu, Bihar, Hindi speaking people are being beaten to such an extent that legal action should be taken after checking the veracity of the video.” என்பதாக இந்தியில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot From Twitter @BharatK12355219

அதேபோன்று வடமாநில தொழிலாளர்கள், குறிப்பாக பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ’’North Indians are being attacked in Tamil Nadu, Hindi speaking people are being attacked. Government of Bihar, Government of Uttar Pradesh, Government of Jharkhand, all are silent. Such oppression on Hindi speaking people has never been seen before in India. Attacks are being made with “sword” and other weapons.” என்பதாகவும் வீடியோக்கள் பரவி வருகின்றன.

Screenshot From Twitter @TanveerPost

இதனைத் தொடர்ந்து, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், “I have come to know through newspapers about the attacks on laborers from Bihar working in Tamil Nadu. I have directed the Chief Secretary and Director General of Police of Bihar to talk to the officials of the Tamil Nadu Government and ensure the safety of the laborers from Bihar living there.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: ஆருத்ரா நிதி நிறுவனத்தில் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் பங்கு என்று பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

Fact Check / Verification

தமிழகத்தில் இந்தி பேசும் வட இந்தியர்களை தாக்கி கொலை செய்வதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

முதலாவது ட்வீட்டில் இடம்பெற்றுள்ள வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வழக்கறிஞர் ஒருவரைத் தாக்கும் வீடியோ என்று Times of India, ANI உள்ளிட்ட ஊடகங்களில் கடந்த பிப்ரவரி 19 அன்று செய்தி வெளியாகியுள்ளது.

இரண்டாவது ட்விட், முதன்முதலில் Mohammad Tanvir என்பவரால் பரவிய நிலையில், அதில் முதலில் இருக்கும் வீடியோ ஏற்கனவே தமிழகத்தில் பரவிய கொலைச்சம்பவம் ஆகும். கோவை நீதிமன்ற வாசலில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியன்று இளைஞரை மர்மக்கும்பல் வெட்டிய நிலையில், கோகுல் என்கிற தமிழக இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த வீடியோவின் வன்முறை காட்சிகள் காரணமாக அதனை இணைப்பாக இங்கே இணைத்துள்ளோம்.

அதே ட்விட்டர் பதிவில், இரண்டாவதாக இடம்பெற்றுள்ள வீடியோவில் காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து காயமடைந்தவருக்கு முதலுதவி அளிப்பது போல் அமைந்துள்ளது. இந்த வீடியோ, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் தங்களுக்குள் தாக்குதல் நடத்திக்கொண்ட வீடியோ என்று தமிழக காவல்துறை விளக்கமளித்துள்ளது. காவல்துறைப் பதிவை தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவின் வீடியோவை தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து விளக்கமளித்துள்ளது பீகார் காவல்துறை.

Also Read: Fact check: பாஜக நிர்வாகிகள் மது அருந்தியதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

Conclusion

தமிழகத்தில் இந்தி பேசும் வட இந்தியர்களை தாக்கி கொலை செய்வதாகப் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Twitter Post From, Tamil Nadu Police, Dated March 02, 2023
News Report From, Time Of India, Dated February 19, 2023
ANI Twitter


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular