Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: பாலஸ்தீன கொடியுடன் மைக் டைசன்
Fact: வைரலாகும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டதாகும்.
குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பாலஸ்தீன கொடியுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“ஒரு போட்டியின் முடிவில் கிடைப்பது மட்டும் வெற்றியாகாது….தான் நேசித்த நோக்கத்தை உலகத்திற்கு சொல்வதுதான் வெற்றி. அதில் வெற்றி பெற்ற மைக் டைசனுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பாலஸ்தீன கொடியுடன் இருப்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தில் டைசனின் கண்கள் வித்தியாசமாக அமைந்திருப்பதைக் காண முடிந்தது. எனவே, TrueMedia மூலமாக வைரல் புகைப்படத்தை ஆராய்ந்தபோது “substantial evidence of manipulation” என்கிற முடிவை நாம் கண்டுகொண்டோம்.
தொடர்ந்து, AI Detect Content மூலமாக ஆராய்ந்தபோது அதிலும் likely AI generated/deepfaked என்கிற முடிவு நமக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட AI எடிட் புகைப்படமே தற்போது மைக் டைசன் பாலஸ்தீன கொடியுடன் இருப்பதாக வைரலாகி வருகிறது.
Also Read: இந்து பெண்ணுக்கு புர்கா தந்து மானத்தை காப்பாற்றிய இஸ்லாமியப் பெண்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
Conclusion
குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பாலஸ்தீன கொடியுடன் இருப்பதாகப் பரவும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
TrueMedia tool
AI Detect Content tool
(இக்கட்டுரை முன்னதாக நமது Newschecker ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.