ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஅடுத்த பிரதமராக மோடியே வர வேண்டும் என்று 93% மக்கள் வாக்களித்தனரா?

அடுத்த பிரதமராக மோடியே வர வேண்டும் என்று 93% மக்கள் வாக்களித்தனரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அடுத்த பிரதமராக மோடியே வர வேண்டும் என்று 93% மக்கள் வாக்களித்ததாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டது.

Fact: வைரலாகும் கருத்துக்கணிப்பு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையான கருத்துக்கணிப்பில் 19% மக்களே மோடிக்கு வாக்களித்திருந்தனர். 

அடுத்த பிரதமராக மோடியே வர வேண்டும் என்று 93% மக்கள் வாக்களித்ததாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அடுத்த பிரதமராக மோடியே வர வேண்டும் என்று 93% மக்கள் வாக்களித்ததாக வைரலாகும் தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு

Twitter Link | Archived Link

அடுத்த பிரதமராக மோடியே வர வேண்டும் என்று 93% மக்கள் வாக்களித்ததாக வைரலாகும் தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு

Facebook Link

அடுத்த பிரதமராக மோடியே வர வேண்டும் என்று 93% மக்கள் வாக்களித்ததாக வைரலாகும் தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பில்கேட்ஸ் கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடையை சுத்தம் செய்தாரா ?

Fact Check/Verification

அடுத்த பிரதமராக மோடியே வர வேண்டும் என்று 93% மக்கள் வாக்களித்ததாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு ஒன்று வைரலானதை தொடர்ந்து தந்தி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

அதில் தந்தி தொலைக்காட்சி வைரலாகும் இந்த கருத்துக்கணிப்பு படத்தை அண்மையில்  வெளியிட்டதாக எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.

இதனையடுத்து வைரலாகும் கருத்துக்கணிப்பு படத்தில் குறிப்பிட்டுள்ள, ‘யார் பிரதமராக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்…?’ என்கிற தலைப்பில் தந்தி தொலைக்காட்சி எப்போதாவது கருத்துக்கணிப்பு படம் வெளியிட்டுள்ளதா என தேடினோம்.

இத்தேடலில் நவம்பர் 19, 2018 அன்று இதே தலைப்பில் தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு படம் ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் அப்படத்தில் மோடிக்கு 19% வாக்குகள் கிடைத்ததாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத்குமாரை தொடர்புக் கொண்டு வைரலாகும் கருத்துக்கணிப்பு படம் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் அப்படம் எடிட் செய்யப்பட்டது என உறுதி செய்ததுடன், 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மேற்கண்ட கருத்துணிப்பு படத்தையும் நமக்கு பகிர்ந்தார்.

இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும் கருத்துக்கணிப்பு படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பது தெளிவாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான கருத்துக்கணிப்பையும் எடிட் செய்யப்பட்ட கருத்துக்கணிப்பையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரவும் பழைய வீடியோ!

Conclusion

அடுத்த பிரதமராக மோடியே வர வேண்டும் என்று 93% மக்கள் வாக்களித்ததாக வைரலாகும் தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
X post from Thanthi TV, Dated November 19, 2018
Phone Conversation with Vinothkumar, Thanthu TV

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular