Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: பிரிட்டிஷ் மகாராணிக்கு RSS அணிவகுப்பு மரியாதை செலுத்திய காட்சி
Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு பரவி வருகிறது.
பிரிட்டிஷ் மகாராணிக்கு ஆர்எஸ்எஸ் அணிவகுத்து மரியாதை செலுத்திய காட்சி என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
“பிரிட்டிஷ் மகாராணிக்கு ஆர்எஸ்எஸ் அணிவகுத்து மரியாதை செலுத்திய காட்சி. பிரிட்டிக்கார்களுக்கு ஆதரவாகவும் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு எதிராகவும் இருந்தவர்கள்தான் இந்த தேஷ் பக்தர்கள்.! இன்று தேச பக்தியை பற்றி இவர்கள் பாடம் எடுப்பதுதான் சிரிப்பு வருகிறது.!” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது. இதுகுறித்து, நம்முடைய வாசகர் ஒருவர் வாட்ஸப் மூலமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றாரா டிரம்ப்?
Fact Check/Verification
பிரிட்டிஷ் மகாராணிக்கு ஆர்எஸ்எஸ் அணிவகுத்து மரியாதை செலுத்திய காட்சி என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அது இரு வேறு புகைப்படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
RSS உறுப்பினர்கள் அணிவகுத்து நிற்கும் புகைப்படம் நமக்கு கடந்த 2011ஆம் ஆண்டு Jargan செய்தி ஊடகத்தில் பகிரப்பட்டிருப்பது கிடைத்தது. அதுமட்டுமின்றி, Hindustan Times, Deccan Chronical உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளது இப்புகைப்படம். மேலும், விக்கிபீடியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு இப்புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. இதிலிருந்து, சமீபத்திய வருடங்களில் எடுக்கப்பட்டது இந்த புகைப்படம் என்பது நமக்கு உறுதியாகியது.
தொடர்ந்து, இப்புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரிட்டிஷ் மகாராணியின் புகைப்படத்தை ஆராய்ந்தபோது புகைப்படத்தொகுப்புகளுக்கான வலைத்தளம் ஒன்றில் இப்புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. அதில், மகாராணி எலிசபெத்தை வரவேற்று நைஜீரியன் படை வீரர்கள் அணிவகுத்து நிற்பதை நம்மால் காண முடிந்தது. 1956, பிப்ரவரி 02 அன்று நைஜீரியாவின் கடுனா ஏர்போர்ட்டில் அவர் அப்படைவீரர்களைப் பார்வையிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்புகைப்படம் பல்வேறு செய்தி ஊடகங்களிலும் இடம்பெற்றுள்ளது. அதை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணுங்கள்.
குறிப்பிட்ட அந்த புகைப்படத்தையும், சமீபத்திய வருடங்களில் ஆர்எஸ்எஸ் குழுவினர் அணிவகுத்து எடுத்த புகைப்படத்தையும் ஒன்றிணைத்து பிரிட்டிஷ் மகாராணிக்கு மரியாதை செலுத்திய ஆர்எஸ்எஸ் என்று இப்புகைப்படம் பரப்பப்படுகிறது.
Also Read: மின்கம்பத்தை நடுவில் வைத்து கால்வாய் கட்டப்பட்டதாக பரவும் படம் தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?
Conclusion
பிரிட்டிஷ் மகாராணிக்கு ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்திய காட்சி என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
Report From, deccanchronicle, Dated January 26, 2016
Report From, The Guardian, Dated October 07, 2016
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.