Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: மாட்டிறைச்சி உண்பது குறித்து மாற்றி மாற்றி பேசினார் திருமாவளவன்.
Fact: இத்தகவல் தவறானதாகும். திருமாவளவன் மாட்டிறைச்சி தனக்கு பிடிக்கும் என்று எவ்விடத்திலும் கூறியதில்லை. மாறாக தனக்கு பிடிக்காவிட்டாலும், தொண்டர்களின் ஆசைக்காக சிறிது காலம் சாப்பிட்டதாகவும், பின்னர் உடல்நிலை காரணமாக மொத்தமாக சைவ உணவு உண்பவராக மாறியதாகவும் அவர் பேசி உள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்து பேசிய வீடியோவையும், மாட்டிறைச்சி சாப்பிட மாட்டேன் என்று அவர் கூறிய வீடியோவையும் இணைத்து திருமாவளவன் மாற்றி மாற்றி பேசுவதாக இளைய பாரதம் எனும் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
இவ்வீடியோவை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து திருமாவளவன் மக்களை ஏமாற்றி வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆதவ் ஆர்ஜூனை நீக்கியப்பின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டு பயணித்தாரா திருமாவளவன்?
Fact Check/Verification
மாட்டிறைச்சி உண்பது குறித்து திருமாவளவன் மாற்றி மாற்றி பேசியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக திருமாவளவன் மாட்டிறைச்சியை ஆதரித்து பேசும் வீடியோ குறித்து தேடினோம். அதில் திருமாவளவன் ஸ்பீச் எனும் யூடியூப் பக்கத்தில் அதன் நெடிய வடிவம் பதிவிட்டிருந்தை காண முடிந்தது.
அவ்வீடியோவில் திருமாவளவன் மாட்டிறைச்சி உண்பதை ஆதாரித்து பேசி இருந்தார். அதே நேரம், (2:06 நேரத்தில்) சிறுவயதிலிருந்தே அவர் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை என்றும், அசைவம் சாப்பிடுவது அவர் உடலுக்கு ஒற்றுக்கொள்ளாததால் 17 ஆண்டுகளுகளாக மற்ற அசைவ உணவுகளை உண்பதை நிறுத்திவிட்டதாகவும் அவர் பேசி இருப்பதை காண முடிந்தது.
இதனைத் தொடர்ந்து தேடியதில் பிஹைண்ட்வுட் ஏர் யூடியூப் பக்கத்திற்கு திருமாவளவன் கொடுத்த பேட்டி ஒன்றில் (02:50 நேரத்தில்) அசைவ உணவை கைவிட்டது குறித்தும், மாட்டிறைச்சி உண்டது குறித்தும் பேசி இருப்பதை காண முடிந்தது.
அசைவம் குறித்த கேள்விக்கு, சிறுவயதில் மீன், இறைச்சி போன்ற உண்டதாகவும், பொது வாழ்க்கைக்கு வந்தப்பின் நள்ளிரவு 1 மணிக்கு உணவு உண்ணும் நிலை வந்ததாகவும், அந்நேரத்தில் மசாலா கலந்த அசைவ உணவுகள் உடலுக்கு கேடு விளைவித்ததால் அவ்வகை உணவை உண்ணும் பழக்கத்தை கைவிட்டதாகவும் திருமாவளவன் கூறி இருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து மாட்டிறைச்சி உண்டிருக்கின்றீகளா எனும் கேள்விக்கு, சிறுவயதில் தான் சாப்பிட்டதில்லை என்றும், பொது வாழ்க்கைக்கு வந்தப்பின் மதுரையில் கட்சித் தோழர்கள் வீட்டில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகவும், பின்னர் அனைத்து அசைவ உணவுகளை நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தேடுகையில் தனது மணிவிழா நிகழ்ச்சியிலும் இதே கருத்தை திருமாவளவன் பேசி இருந்ததை காண முடிந்தது. இதுக்குறித்த வீடியோ கலாட்டா வாய்ஸ் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அவ்வீடியோவின் 16:33 நேரத்தில் இக்கருத்தை அவர் பேசி இருந்தார்.
கிடைத்த ஆதாரங்களின் பார்க்கையில் திருமாவளவன் மாட்டிறைச்சி ஆதரவாளராக இருந்தாலும், மாட்டிறைச்சி சாப்பிடுவது தனக்கு பிடிக்கும் என்று அவர் எத்தருணத்திலும் பேசி இருக்கவில்லை. மாறாக தனக்கு பிடிக்காவிட்டாலும், தொண்டர்களின் ஆசைக்காக சிறிது காலம் சாப்பிட்டதாகவும், பின்னர் உடல்நிலை காரணமாக மொத்தமாக சைவ உணவு உண்பவராக மாறியதாகவும் அவர் பேசி இருந்ததை காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் மாட்டிறைச்சி உண்பது குறித்து திருமாவளவன் நேரத்திற்கேற்ப மாற்றி மாற்றி பேசியதாக பரவும் தகவல் திரித்து பரப்பப்படும் தவறான தகவல் என அறிய முடிகின்றது.கிலிருந்து பதிவிடப்பட்டதை அவரும் உறுதி செய்தார்.
Also Read: இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினரா?
Conclusion
மாட்டிறைச்சி உண்பது குறித்து திருமாவளவன் மாற்றி மாற்றி பேசியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
YouTube Video from Thirumavalavan speech, Dated August 27, 2022
YouTube Video from Behindwoods Air, Dated April 01, 2021
YouTube Video from Galatta Voice, Dated October 08, 2022
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.