ஒமிக்ரான் BA.5 வகை வைரஸ் மூளையை பாதிக்கும் என்று ஊடகங்களில் செய்தி ஒன்று வந்துள்ளது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தாயின் மறைவிற்குப் பின் இந்து சமய முறைப்படி தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டாரா பிரதமர் மோடி?
Fact Check/Verification
ஒமிக்ரான் BA.5 வகை வைரஸ் மூளையை பாதிக்கும் என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
அதில் ஊடகங்களில் இந்த செய்தியானது சவுத் சைனா மார்னங் போஸ்ட் என்ற சீன ஊடகம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
எனவே அச்செய்தியை ஆய்வு செய்ததில் bioRxiv எனும் தனியார் அமைப்பு செய்த ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டதாக சவுத் சைனா மார்னங் போஸ்ட் குறிப்பிட்டிருந்ததை காண முடிந்தது. கூடவே மற்ற அறிஞர்கள் இம்முடிவை ஏற்கவில்லை என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
bioRxiv முதலில் ஆய்வு எலிகளும், பின்னர் செயற்கையாக உருவாக்கப்பட்ட மூளையிலும் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இதில் கிடைத்த முடிவுகள் மனித மூளைக்கு பொருந்தாது என்று அறிஞர்கள் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து bioRxiv-ன் ஆய்வு அறிக்கையை தேடி கண்டறிந்து படிக்கையில், இந்த ஆய்வானது ஆய்வு எலிகளையும், செயற்கையாக உருவாக்கப்பட்ட மூளையை வைத்தே செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியானது.
இதனையடுத்து தேடியதில் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்திருந்தை காண முடிந்தது.
அதேபோல் தமிழ்நாடு பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோவும் இத்தகவலை மறுத்துள்ளதை காண முடிந்தது.
Also Read: பிரதமர் மோடி தாயின் அஸ்தியை கரைத்ததாக பரவும் பழைய வீடியோ!
Conclusion
ஒமிக்ரான் BA.5 வகை வைரஸ் மூளையை பாதிக்கும் என்று ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்று இந்திய சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Tweet from @pibchennai dated January 3, 2022
Facebook post from Ministry of Health and Family Welfare, Government of India dated January 3, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)