வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

HomeFact Checkஇஸ்ரேல் பிரதமர் தனது மகனை பாலஸ்தீனத்துக்கு எதிரான போருக்கு அனுப்பி வைத்தாரா?

இஸ்ரேல் பிரதமர் தனது மகனை பாலஸ்தீனத்துக்கு எதிரான போருக்கு அனுப்பி வைத்தாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இஸ்ரேல் பிரதமர் தனது மகனை பாலஸ்தீனத்துக்கு எதிரான போருக்கு அனுப்பி வைத்த காட்சி

Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

இஸ்ரேல் பிரதமர் தனது மகனை பாலஸ்தீனத்துக்கு எதிரான போருக்கு அனுப்பி வைத்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”இஸ்ரேலின் பிரதமர் தனது மகனை பாலஸ்தீனத்துக்கு எதிரான போருக்கு அனுப்பி வைக்கும் காட்சி. இஸ்ரேலை சுற்றி பகைவர்கள் சூழ்ந்துள்ளதால் இஸ்ரேலிகள் அனைவரும் தீவிர நாட்டுப்பற்றுடன் இருக்கின்றனர்.” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

இஸ்ரேல் பிரதமர்
Screenshot from Facebook/Jothilingam Bjp

Facebook Link

Screenshot from Facebook/hindurelegion.followers

Facebook Link

screenshot from X @johni_raja

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காஸா மீது பழிக்கு பழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் என்று பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

இஸ்ரேல் பிரதமர் தனது மகனை பாலஸ்தீனத்துக்கு எதிரான போருக்கு அனுப்பி வைத்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படமானது கடந்த 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது.

ஜெருசலேம் போஸ்ட், கடந்த டிசம்பர் 01, 2014 அன்று “shine your shoes! Netanyahu’s youngest son begins army service” என்கிற தலைப்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இளைய மகன் அவ்நெர் நெதன்யாகு மூன்று வருட இராணுவ பயிற்சிக்கு சென்றபோது வெளியாகிய செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து, டிசம்பர் 30, 2014 அன்று வெளியாகிய செய்தியிலும் இப்புகைப்படத்துடன் அவருக்கு இராணுவ பயிற்சியில் சிறியளவிலான காயம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தது ஜெருசலேம் போஸ்ட்.

அதே போன்று, Times of Israel வெளியிட்டிருந்த டிசம்பர் 01, 2014 அன்று செய்தியில், “டிசம்பர் 01, 2014 அன்று அவர்களது இளைய மகனுடன் ஜெருசலேமில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா” என்று இப்புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
 
எனவே, இந்த வைரல் புகைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது; தற்போதைய ஒன்று அல்ல என்பது உறுதியாகிறது.

Also Read: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தாரா?

Conclusion

இஸ்ரேல் பிரதமர் தனது மகனை பாலஸ்தீனத்துக்கு எதிரான போருக்கு அனுப்பி வைத்ததாகப் பரவும் புகைப்படம் 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report From, JPost, Dated December 01, 2014
Report From, Times of Israel, Dated December 01, 2014


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular