திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkதமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தாரா?

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு

Fact: இத்தகவல் தவறானதாகும். தீர்மானம் முழுமையாக இல்லை என்றே வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

“காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்றுத்தர கர்நாடக அரசை ஒன்றிய அரசு வலியுறுத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்தை அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒரு மனதாக ஆதரித்த நிலையில், பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் எதிர்ப்பு” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்ததாக பரவும் தகவல்

X Link | Archived Link

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்ததாக பரவும் தகவல்

Facebook Link

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்ததாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காஸா மீது பழிக்கு பழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் என்று பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்ததாக நியூஸ்கார்டு வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

நம் தேடலில் வானதி சீனிவாசன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய வீடியோ புதிய தலைமுறை  யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதில் காவிரி நதிநீர் குறித்த தீர்மானத்தில் நதிகளை தேசியமயமாக்குதல், அணை பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு உள்ளிட்ட அம்சங்களையும் சேர்த்தால் ஆதரவு தருவதாக வானதி சீனிவாசன் பேசி இருப்பதை காண முடிந்தது.

இதை தொடர்ந்து வானதி சீனிவாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வீடியோ ஒன்று நியூஸ் 18 தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதில் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிரந்தர தீர்வை தரக்கூடிய முழுமையான தீர்மானமாக இல்லாததால் அதை எதிர்த்து வெளியேறியதாக வானதி சீனிவாசன் பேசி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து வானதி சீனிவாசனை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அதற்கு அவர், நான் தீர்மானம் முழுமையானதாக இல்லை என்றே கூறினேன். தமிழகத்திற்கு நீர் கொடுக்கக் கூடாது என்று கூறவில்லை என்று விளக்கமளித்தார்.

இவற்றின் அடிப்படையில் காண்கையில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகின்றது.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இதில் ‘காங்கிரஸ்’ என குறிப்பிடாமல் கர்நாடக அரசு எனக் குறிப்பிட்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டதால் பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்ததாக புதிய தலைமுறை நியூஸ்கார்டு வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட நியூஸ்கார்டு போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று பதிலளித்தார்

Also Read: மத்தியப் பிரதேசத்தில் கருத்துக் கேட்க சென்ற பாஜக வேட்பாளர்களை பொது மக்கள் தாக்கினரா?

Conclusion

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Youtube Video from Puthiya Thalaimurai, Dated October 09, 2023
Youtube Video from News 18 Tamilnadu, Dated October 09, 2023

Phone Conversation With Vanathi Srinivasan, MLA, BJP
Phone Conversation With Ivany, Digital Head, Puthiya Thalaimurai


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular