ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதிமுக ஆட்சியில் படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ஓடுவதாக பரவும் பழைய வீடியோ!

திமுக ஆட்சியில் படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ஓடுவதாக பரவும் பழைய வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: திமுக ஆட்சியில் படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ஓடுகின்றது.

Fact: வைரலாகும் வீடியோ 2018 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.

சத்தியம் தொலைக்காட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ஓடுவதாக வீடியோ ஒன்றை கடந்த வெள்ளியன்று (26/05/2023) பதிவிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து திமுக ஆட்சியை விமர்சித்து பலரும் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.     

 திமுக ஆட்சியில் படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ஓடுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ
Screenshot from Twitter@ThiruttuRaiyil
 திமுக ஆட்சியில் படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ஓடுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ
Screenshot from Twitter@Mahi1987Mass
 திமுக ஆட்சியில் படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ஓடுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ
Screenshot from Facebook/saravsaran

வைரலாகும் இப்பதிவுகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே கணலாம்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு கிண்டலாக பதிலளித்தாரா ரவீந்திர ஜடேஜா?

Fact Check/Verification

திமுக ஆட்சியில் படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ஓடுவதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் வைரலாகும் வீடியோவானது 2018 ஆம் ஆண்டில், அதாவது அஇஅதிமுக ஆட்சிப்பொறுப்பில் இருக்கும்போது வெளிவந்த வீடியோ என்பதை அறிய முடிந்தது.

ஒன் இந்தியா தமிழில் இந்த வீடியோ குறித்து ஜூலை 24, 2018 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

 திமுக ஆட்சியில் படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ஓடுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ
Screengrab from One India Tamil

ஒன் இந்தியா தவிர்த்து மேலும் சில ஊடகங்களும் இதுக்குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் சத்தியம் தொலைக்காட்சியும் இந்த வீடியோ குறித்து ஜூலை 27, 2018 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து வைரலாகும் வீடியோவில் காணப்படும் TN58 N0831 எனும் பதிவெண்ணையுடைய பேருந்து குறித்து மத்திய அரசின் NextGen mparivahan செயலியின் வழியாக ஆராய்கையில் இப்பேருந்து தற்சமயம் பயன்பாட்டிலேயே இல்லை என அறிய முடிந்தது.

 திமுக ஆட்சியில் படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ஓடுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ
Screengrab from NextGen mparivahan

Also Read: ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கப்பட்டதா அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்?

Conclusion

திமுக ஆட்சியில் படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் அரசு பேருந்து ஓடுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ 2018 ஆம் ஆண்டு வெளியான பழைய வீடியோ என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from One India Tamil, Dated July 24, 2018

Report from Sathyam TV, Dated July 27, 2018
NextGen mparivahan

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular