Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மகரசங்கராந்தி பண்டிகையை ஒட்டி கங்கையில் நீராடிய அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
”மகர சங்கராந்தியை ஒட்டி புனித கங்கையில் நீராடல் -யோகி ஆதித்யநாத், உள்துறை அமைச்சர் அமித்ஷா.” என்கிற தலைப்புடன் அந்த வீடியோ பதிவு பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தலைவாழை விருந்து என்று பரவும் கனடா வீடியோ!
மகரசங்கராந்தி பண்டிகையை ஒட்டி கங்கையில் நீராடிய அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் நீராடும் காட்சி இடம் பெற்றிருந்ததுடன் அதில் இடது கீழ் ஓரத்தில் 2019 என்கிற ஆண்டும் இடம் பெற்றிருந்தது. எனவே, குறிப்பிட்ட வைரல் வீடியோ 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிந்தது. தொடர்ந்து, குறிப்பிட்ட வீடியோவில் இடம் பெற்றிருந்த Modi Giri என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ கடந்த ஜூலை 17,2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்ததும் நமக்குக் கிடைத்தது.
தொடர்ந்து, “கங்கை”, “அமித்ஷா”, “யோகி ஆதித்யநாத்” உள்ளிட்ட கீ-வேர்டுகளைக் கொண்டு கூகுளில் தேடியபோது கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளா நிகழ்வில், அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரயாகையில் புனித நீராடினர் என்று குறிப்பிட்ட வீடியோவுடன் பல்வேறு செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டிருந்தது நமக்குக் கிடைத்தது. ஆனால், வைரல் வீடியோவில் இருந்து அது சற்றே மாறுபட்டிருந்தது.
ANI UP/Uttarakhand செய்தி நிறுவனமும் இச்செய்தியை வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த வீடியோ வைரல் வீடியோவுடன் ஒத்துப் போகவில்லை.
எனவே, அதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு மகா கும்பமேளா துவங்கிய ஜனவரி 15 ஆம் தேதியில் இருந்து தேடியபோது, வைரல் வீடியோவில் இருக்கும் விஷூவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜனவரி 29, 2019 அன்று புகைப்படங்களாகப் பகிர்ந்திருந்தார் யோகி ஆதித்யநாத். அதனை, “At the historic Kumbh, Prayagraj today, on the banks of the holy confluence, worshiped and performed aarti after taking a bath with revered saints and the members of the Council of Ministers of the state government.” என்று பகிர்ந்திருந்தார்.
தொடர்ந்து, ANI UP/Uttarkhand ட்விட்டர் பக்கத்தில் ஜனவரி 2019ல் தேடியபோது, ஜனவரி 29, 2019 அன்று வெளியாகியிருந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. அக்காட்சியும், வைரல் வீடியோவில் உள்ள காட்சியும் ஒன்று என்று நம்மால் அறிய முடிந்தது.
இதனடிப்படையில், மகரசங்கராந்தி பண்டிகையன்று அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் கங்கையில் நீராடியதாக தற்போது பரவும் வீடியோ கடந்த ஜனவரி, 2019 ஆம் ஆண்டு கும்பமேளாவில் எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.
Also Read: கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் அரிதான காட்சி என்று பரவும் தவறான வீடியோ தகவல்!
மகரசங்கராந்தி பண்டிகையை ஒட்டி கங்கையில் நீராடிய அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் என்று பரவும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு கும்பமேளாவில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Twitter Post From, Yogi Adityanath, Dated January 29, 2019
Twitter Post From, ANI UP/Uttarakhand, Dated January 29, 2019
Kumbh Mela 2019 Schedule From, Prayagraj.nic.in
Twitter Post From, ANI UP/Uttarakhand, Dated February 13, 2019
Article From, Deccanchronicle, Dated February 13, 2019
YouTube Video From, Hindustan Times, Dated February 13, 2019
YouTube Video From, LiveHindustan, Dated January 30, 2019
Facebook Post From, ModiGiri, Dated July 17, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 4, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 27, 2025
Komal Singh
March 10, 2025