Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தலைவாழை விருந்து என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தலைவாழை இலையில் பொங்கல் விருந்து” என்பதாக இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தை வீட்டில் என்று பரவும் தவறான வீடியோ தகவல்!
இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தலைவாழை விருந்து என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பொங்கல் விருந்து குறித்து ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று தேடியபோது அவ்வாறு எந்த பதிவும் இடம்பெறவில்லை. ஜனவரி 14 மற்றும் 16க்கு இடையில் ஜனவரி 15, பொங்கலன்று எந்தப்பதிவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் இல்லை.
எனவே, குறிப்பிட்ட வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அதன் முடிவில், @berryonline வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் இதே போன்ற பின்புலத்துடன் பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அவரது ட்விட்டர் கணக்கில் Kitchener Mayor, Ontario canada அவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, நாம் தேடியபோது வாட்டர்லூவில் அமைந்திருக்கும் கனடா தமிழ் சங்கத்தின் பொங்கல் கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்ட மேயர், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்நிகழ்வில் அளிக்கப்பட்ட விருந்து உண்ணும் வீடியோ அது என்பது “Thai Pongal 2023” என்கிற தலைப்பில் வாட்டர்லூ தமிழ்ச்சங்கம் பக்கத்தில் இடம் பெற்றிருந்த புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்புகளின் மூலமாகத் தெரிய வந்தது.


அவர்களுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் ”TCA Tamil Thai Pongal Celebration (Tamil Thanksgiving) region of Waterloo politicians, Regional Chair City Mayors, councilors and Police Chief and staff.” என்று இந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் அங்கு பொங்கல் விருந்து அளித்ததாகப் பரவிய வீடியோ தகவல் குறித்த உண்மையறியும் சோதனையை நாம் நம்முடைய நியூஸ்செக்கர் ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கிறோம்.
Also Read: அயோத்தி ராமரை தினசரி தரிசிக்க வரும் குரங்கு என்று பரவும் தவறான வீடியோ தகவல்!
இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தலைவாழை விருந்து என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Tweet from Berry Verbanovic
Facebook video from Tamil Waterloo
Pongal Celebration Images From, Tamil Cultural Region Waterloo Official Website
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
September 26, 2023
Ramkumar Kaliamurthy
September 25, 2023
Ramkumar Kaliamurthy
September 20, 2023