Fact Check
இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் தாலிபான்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Claim
இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் தாலிபான்கள்
Fact
வைரலாகும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு முதலே பரவுகிறது. இது பாகிஸ்தான் திருமண நிகழ்வொன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்.
இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இந்திய வெற்றியை கொண்டாடும் தலீபான்கள்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா?
Fact Check/Verification
இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் தாலிபான்கள் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது MTN World Wide என்கிற யூடியூப் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 11, 2021 அன்று இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. மேலும், அதில் ”#this video is for entertainment only peacefully and Pathan culture wedding Dance. Bannu DJ Full HD Video 2021” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, வேறு சில யூடியூப் சேனல்களும் இந்த வீடியோவைக் கடந்த மார்ச் 2021ஆம் ஆண்டே பகிர்ந்துள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு இந்த வீடியோ தொடர்பாக ஏற்கனவே நமது நியூஸ்செக்கரில் ஃபேக்ட் செக் வெளியிட்டுள்ளோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, வீடியோவில் இடம்பெற்றுள்ள நபர் ஒருவரை கடந்த 2021ஆம் ஆண்டே தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் இந்த வீடியோ பாகிஸ்தான் பன்னுவில் திருமண நிகழ்வொன்றில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்தார்.
Also Read: தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தூக்கியெறிந்த மாணவி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் தாலிபான்கள் என்று பரவும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video By MTN World Wide, Dated April 11, 2021
X Post By @IftikharFirdous, Dated August 15, 2021