செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

HomeFact Checkபாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான பாபர் அசாம் தனது சகோதரியை திருமணம் செய்தாரா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான பாபர் அசாம் தனது சகோதரியை திருமணம் செய்தாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: சகோதரியை மணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம்

Fact: வைரலாகும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தனது சகோதரியை திருமணம் செய்து கொண்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“நான் செய்வதை உங்களால் செய்ய முடியுமா..? என்று இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் விட்ட. பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர்அசாம். பின்னர் தன் சகோதரியை திருமணம் செய்து கொண்டார்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.

Screenshot from Twitter @ananthamharshi

Archived Link

Screenshot from Facebook/Devasena

Facebook Link

Screenshot from Facebook/sakthibalaji36

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதா?

Fact Check/Verification

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தனது சகோதரியை திருமணம் செய்து கொண்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது வைரல் புகைப்படத்தில் பாபருடன் இருப்பவர் கிரிக்கெட் போட்டிகளின் சர்வதேச அம்பயர்களில் ஒருவரான அலீம் தாரின் சகோதர வழி மருமகள் ஜாரா நயீம்தார் ஆவார் என்பது நமக்குத் தெரிய வந்தது.

கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று ஜாரா இப்புகைப்படத்தை ”#1 and only” என்கிற பதிவுடன் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Instagram will load in the frontend.

தொடர்ந்து, பாபர் அசாமிற்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை என்பதும், அவருடையை திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு பாபர் அசாமின் அதிகாரப்பூர்வ மக்கள் தொடர்பு நிறுவனமான Saya corporation மறுப்பு தெரிவித்து கடந்த ஆகஸ்ட் 15 அன்று சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், பாபர் அசாமின் குடும்பத்தினர் தரப்பிலும் பரவும் திருமணச்செய்தி போலியானது என்று பல்வேறு ஊடகங்களுக்கு விளக்கமளித்து செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவற்றை இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.

Also Read: சுதந்திர தின பாதுகாப்பு பணியில் பெண் ராணுவ வீரர் என்று பரவும் 2019ஆம் ஆண்டு புகைப்படம்!

Conclusion

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தனது சகோதரியை திருமணம் செய்து கொண்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் ஒரு வதந்தி என்பது  நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Instagram Post From, Zaraa Dar, Dated January 30, 2023
Twitter Post From, Saya Corporation, Dated August 15, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular