ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதிமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளதா?

திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளது.

Fact: வைரலாகும் செய்தி 2019 ஆம் ஆண்டு வந்த பழைய செய்தியாகும். அச்சமயத்தில் ஆட்சியில் அதிமுகவாகும்.

வரும் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக்கில் ₹350 கோடிக்கு மது விற்பனை செய்ய திமுக அரசு இலக்கு நிர்ணையித்ததாக பத்திரிக்கை செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளது.

Twitter Link | Archived Link

திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளது.

Facebook Link

திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளது.

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விஜய் தொலைக்காட்சியில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் ஒளிபரப்பப்பட்டதா?

Fact Check/Verification

திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளதாக கூறி வைரலாகும் இந்த பத்திரிக்கை செய்தியானது தினத்தந்தி பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி என்பதை அறிய முடிந்தது.

இதனையடுத்து இச்செய்தி எப்போது வெளிவந்தது என்று தேடினோம். இத்தேடலில் வைரலாகும் இந்த பத்திரிக்கை செய்தி கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே சமூக ஊடகங்களில் வைரலாகியதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் தினத்தந்தியின் சார்பு நிறுவனமான மாலை மலரில் இச்செய்தியானது 21, அக்டோபர் 2019-யில் வெளிவந்திருப்பதை காண முடிந்தது.  

திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளது.
Screengrab from Maalai Malar

இதுத்தவிர்த்து கலைஞர் செய்திகள், தினமணி உள்ளிட்ட ஊடகங்களிலும் அச்சமயத்தில் இதுகுறித்த செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது.

இதனடைப்படையில் காண்கையில் வைரலாகும் இந்த பத்திரிக்கை செய்தி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது தெளிவாகின்றது. அச்சமயத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது திமுக அல்ல; எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவாகும். ஆகவே திமுக அரசு மது விற்க இலக்கு வைத்ததாக பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகின்றது.

Also Read: காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சியில் இணையும் பெண்ணிற்கு முத்தமிடுவதாகப் பரவும் வீடியோ உண்மையா?

Conclusion

திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளதாக கூறி வைரலாகும் இந்த பத்திரிக்கை செய்தியானது  2019 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வெளிவந்த பழைய செய்தியாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Facebook Post, Dated October 21, 2019
Report from Maalai Malar, Dated October 21, 2019

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular