Claim
செப்டம்பர் 1 முதல் 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: திமுக ஆட்சியில் சமீபத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact
செப்டம்பர் 1 முதல் 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாக தகவல் ஒன்று பரவிதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
அந்த ஆய்வில் இத்தகவல் முற்றிலும் தவறானது என அறிய முடிந்தது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் நூறு மற்றும் இருநூறு ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் நிலையங்களில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
- செப்டம்பர் 30, 2025க்குள் 75 சதவீதம் ஏடிஎம் மெஷின்களுள் குறைந்தது ஒரு கேசட்டிலிருந்து 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகள் வெளிவருமாறு செய்யவேண்டும்.
- மார்ச் 31, 2016க்குள் 90 சதவீதம் ஏடிஎம் மெஷின்களுள் குறைந்தது ஒரு கேசட்டிலிருந்து 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகள் வெளிவருமாறு செய்யவேண்டும்.
என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இது தவிர்த்து 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்காது என்று எவ்விடத்திலும் அறிவிக்கவில்லை.
Also Read: மகாராஷ்டிராவில் நீதிபதியும் வக்கீலும் சண்டையிட்டதாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?
கேசட் என்றால் என்ன?
கேசட் என்பது ஏடிஎம் மெஷின்களில் பணம் அடுக்கி வைக்கும் பகுதியாகும். ஒவ்வொரு கேசட்டிலும் 100 நோட்டுகள் வைக்கலாம். ஒவ்வொரு ஏடிஎம் மெஷினும் 4 கேசட்டுகளை கொண்டிருக்கும்.
தொடர்ந்து தேடுகையில் பிஐபி ஃபேக்ட்செக்கும் இத்தகவல் தவறானது என்று தெரிவித்திருப்பதை காண முடிந்தது.
Sources
RBI Notification, dated April 28, 2025
X post from PIB Fact Check, Dated June 3, 2025