வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Check613 கிலோ எடையுள்ள மணியை அயோத்தி ராமர் கோவிலுக்கு அளித்தாரா கனிமொழி?

613 கிலோ எடையுள்ள மணியை அயோத்தி ராமர் கோவிலுக்கு அளித்தாரா கனிமொழி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள மணியை அளித்தார் கனிமொழி

Fact: இத்தகவல் தவறானதாகும். சென்னையை சேர்ந்த Legal Rights Council என்ற நிறுவனமே அந்த மணியை அளித்தது.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள மணி ஒன்றை அளித்ததாக ஊடகங்களில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள மணியை கனிமொழி  அளித்ததாக ஊடகங்களில் வந்த செய்தி

Article Link | Archived Link

அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள மணியை கனிமொழி  அளித்ததாக ஊடகங்களில் வந்த செய்தி

Article Link | Archived Link

ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்பே பற்றி எரியும் உபி ரயில் நிலையம் எனப்பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

அயோத்தி ராமர் கோவிலுக்கு கனிமொழி 613 கிலோ எடையுள்ள மணியை அளித்ததாக ஊடகங்களில் செய்தி ஒன்று வெளிவந்ததை தொடர்ந்து இதுக்குறித்த்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக கனிமொழி கருணாநிதியை தொடர்புக்கொண்டு வைரலாகும் செய்தி குறித்து விளக்கம் கேட்டோம். அதற்கு அவர் “இந்த செய்தி முற்றிலும் பொய்யானது, அயோத்திக்கு தங்கள் குடும்பத்தின் சார்பில் மணி அனுப்பப்படவில்லை” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து உண்மையிலேயே அந்த மணியை யார் அளித்தார் என்பது குறித்து தேடினோம்.  இத்தேடலில் ‘Jai Sri Ram’ embossed bell weighing 613 kgs brought to Ram Temple in Ayodhya” என்று தலைப்பிட்டு அக்டோபர் 07, 2020 அன்று ANI News செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த செய்தியில் சென்னையை சேர்ந்த Legal Rights Council என்ற நிறுவனம் ‘ராம் ரத் யாத்ரா’ எனும் பெயரில் 613 கிலோ எடையுள்ள மணியை ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்கு ஊர்வலமாக கொண்டு சென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஊர்வலமானது செப்டம்பர் 17-ல் ஆரம்பிக்கப்பட்டு அக்டோபர் 07ல் நிறைவுற்றதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களும் இந்த யாத்திரை குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

இதனைத் தொடர்ந்து இந்த மணியை கனிமொழியுடன் தொடர்புப்படுத்த காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ந்தோம். அதில் கடந்த வெள்ளியன்று (29/12/2023) இந்த மணி குறித்த செய்தி இந்தியா டுடேவில் வெளிவந்திருந்தை காண முடிந்தது.

அந்த மணியில் ‘கனிமொழி’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்ததை அச்செய்தியில் காணப்பட்ட வீடியோவின் வாயிலாக அறிய முடிந்தது. ஆனால் அதில் ‘P.கனிமொழி’ என்று எழுதப்பட்டிருந்தது. கனிமொழி அவரது பெயரை கனிமொழி கருணாநிதி என்றே பொதுவெளியில் குறிப்பிடுவார். அதேபோல் அவரது கணவர் பெயர் ‘அரவிந்தன்’ என்பது அனைவரும் அறிந்தததே. இதனடிப்படையில் பார்க்கையில் மணியில் குறிப்பிட்டுள்ள ‘P.கனிமொழி’ கண்டிப்பாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கிடையாது என்பதை உணர முடிகின்றது.

இதுத்தவிர்த்து அந்த மணியில் SPE குரூப் TKS புகழேந்தி, P.லோகேஷ், மஹாலட்சுமி, குமரன், அமர்நாத், வெங்கடேஷ் நாகமணி உள்ளிட்ட பெயர்களும் அதில் இடம்பெற்றிருந்தது.

 ANI வெளியிட்டிருந்த செய்தியில் காணப்பட்ட மணியிலும் இதே பெயர்கள் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து SPE குரூப் குறித்தும், அப்பெயர்கள் குறித்தும் தேடினோம். இதில் SPE கோல்ட் எனும் இணையத்தளத்தை கண்டறிய முடிந்தது. அந்த இணையத்தளத்தில் வாயிலாக மணியில் இடம்பெற்றிருந்த TKS புகழேந்தி, மற்றும் லோகேஷ் இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளனர் என அறியமுடிந்தது.

‘தொடர்ந்து தேடுகையில் TKS புகழேந்தி Legal Rights Council-ன் தேசிய துணைத்தலைவராக உள்ளார் எனவும் அறிய முடிந்தது.

இதனையடுத்து SPE குரூப்பின் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசினோம். அவர் அயோத்திக்கு அனுப்பப்பட்ட மணி அவரது நிறுவனம் மற்றும் குடும்பத்தாரால் தரப்பட்டது என்று உறுதி செய்தார். கூடவே அந்த மணிக்கும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெளிவு செய்தார்.

Also Read: அயோத்தி ராமர் கோயிலுக்கு திருச்சி BHEL நிறுவனம் மணிகளை தயாரித்து அனுப்பியுள்ளதா?

Conclusion

அயோத்தி ராமர் கோவிலுக்கு கனிமொழி 613 கிலோ எடையுள்ள மணியை அளித்ததாக ஊடகங்களில் வந்த செய்தி முற்றிலும் பொய்யானதாகும். உண்மையில் அந்த மணியை சென்னையை சேர்ந்த Legal Rights Council என்ற நிறுவனமே அளித்துள்ளது.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Video report published by India Today on 29th Dec 2023
Video Tweeted by ANI on 28th Dec 2023
Telephonic Conversation with DMK MP Kanimozhi
Telephonic Conversation with SPE Group Director P Lokesh
Report from ANI, Dated October 07, 2020


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular