Claim: சமோசாவைக் காப்பாற்றுவோம் என்ற பதாகையை ஏந்திய கனிமொழி எம்பி.
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்று சன்நியூஸ் தரப்பில் விளக்கமளித்துள்ளனர்.
தூத்துக்குடி எம்பி கனிமொழி ‘சமோசாவைக் காப்பாற்றுவோம்’ என்கிற பதாகையை கைகளில் ஏந்தியிருந்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
” திமுக 40க்கு40 கேண்டீன்ல பஜ்ஜி சாப்பிட போறதுக்கு இவ்வளவு பில்டப் இதற்கு தலைவர் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம்! T.R. பாலு ஓரங்கட்ட பட்டார் . கோபாலபுரம் வாரிசு இல்லையா” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது. இதனை உண்மையென்று நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நின்ற மோடி என்று பரவும் வீடியோவின் பின்னணி என்ன?
Fact Check/Verification
தூத்துக்குடி எம்பி கனிமொழி ‘சமோசாவைக் காப்பாற்றுவோம்’ என்கிற பதாகையை கைகளில் ஏந்தியிருந்ததாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் சன்நியூஸ் வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம். அதில், “திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம்!” என்று வெளியிடப்பட்டிருந்த நியூஸ்கார்டில் ’Save Democracy’ என்கிற பதாகையையே கைகளில் ஏந்தியுள்ளார் கனிமொழி.
குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடுத்தே வைரலாகும் நியூஸ்கார்டினை போலியாக உருவாக்கியுள்ளனர். கேலியாக இதனை உருவாக்கியிருந்தாலும் பலரும் இதனை உண்மையென்றே ஷேர் செய்து வருகின்றனர்.


எனவே, சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு மனோஜ் கார்த்திக்கை இது தொடர்பாக கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்து பரவுகிறது” என்று விளக்கமளித்தார்.
Also Read: CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த கைத்தடமா இது?
Conclusion
தூத்துக்குடி எம்பி கனிமொழி ‘சமோசாவைக் காப்பாற்றுவோம்’ என்கிற பதாகையைக் கைகளில் ஏந்தியிருந்ததாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
X post from, Sun News Tamil, Dated June 10, 2024
Phone Conversation with Manoj Karthick, Sun News digital, Dated June 12, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)