800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்த இந்திய ராணுவம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஆப்கான் மக்கள் வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கி இருந்த 800 இந்தியர்களை ஒரே விமானத்தில் இந்திய ராணுவம் அழைத்து வந்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட் குறித்து இவ்வாறு கூறினாரா?
Fact Check/Verification
800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்த இந்திய ராணுவம் என்று பரவும் புகைப்படத்தின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்து அறிய வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில் அப்படம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய படம் என்பதை அறிய முடிந்தது.
ஹையான் சூறாவளி கடந்த 2013 ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசியாவை தாக்கியது. அதிலும் குறிப்பாக பிலிப்பைன்ஸில் இதன் தாக்கம் மிகவும் மிகுதியாக இருந்தது. அச்சமயத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பிலிப்பைன்ஸ்க்கு உதவிக்கரம் நீட்டியது. அமெரிக்கா சூறாவளியில் சிக்கிக்கொண்டிருந்த மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு விமானம் மூலம் இடம்பெயற உதவியது.
இதுக்குறித்து ஊடகங்களில் வந்த செய்தியை இங்கே, இங்கே படிக்கலாம்.

இத்தருணத்தில் எடுக்கப்பட்ட படமே தற்போது சமூக வலைத்தளங்களில் 800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்த இந்திய ராணுவம் என்று கூறி பரவி வருகின்றது.
Also Read: ஆரஞ்சு மரக்கன்றுக்கு பதிலாக தென்னங்கன்றை நட்டாரா அமைச்சர்?
Conclusion
800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்த இந்திய ராணுவம் என்று கூறி சமூக வலைத்தளங்களில் பரவும் படம் எட்டு ஆண்டுகளுக்கு முந்தி பிலிப்பைன்ஸில் எடுக்கப்பட்ட படம் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.