ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkநடிகர் சரத்பாபு காலமானதாக வதந்தி பரப்பிய ஊடகங்கள்!

நடிகர் சரத்பாபு காலமானதாக வதந்தி பரப்பிய ஊடகங்கள்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்
Fact: வைரலாகும் செய்தி ஒரு வதந்தி என்று அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

நடிகர் சரத்பாபு உயிரிழந்தார் என்று பல்வேறு செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் குணச்சித்திர நடிகராக மிளிர்ந்த நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார் என்று புதியதலைமுறை, பாலிமர் செய்திகள் உள்ளிட்ட தமிழின் முன்னணி செய்தி நிறுவனங்கள் உட்பட பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தனர். 

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: விழுப்புரம் மாவட்டத்தில் 8 ஊராட்சி தலைவர்கள் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டனரா?

Fact Check/Verification

நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வெளியாகிய செய்திகள் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

நடிகர் சரத்பாபு காலமானதாக வெளியிட்ட செய்தியை, வெளியான சிறிது நேரத்திற்குள்ளாகவே செய்தி ஊடகங்கள் நீக்கி விட்டன. எனினும், அந்த நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சரத்பாபு குடும்பத்தினரின் சார்பாக சினிமா செய்தித்தொடர்பாளர் வம்சி மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ள அவரது சகோதரி, “சரத்பாபு உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் பற்றி சமூக வலைத்தளங்களில் வருகின்ற செய்தி போலியானதாகும். விரைவில் குணமடைந்து அவர் செய்தி ஊடகங்களில் பேசுவார். சமூக வலைத்தளங்களில் வரும் எல்லா செய்திகளையும் நம்பாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் கிரணும் அவர் மருத்துவமனையில் நலமுடன் உள்ளார் என்று உறுதி செய்துள்ளார்.

Also Read: Fact Check: பாகிஸ்தானில் இறந்த மகள்கள் சமாதிக்கு பூட்டு போடும் பெற்றோர் எனப் பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வெளியாகிய செய்தி ஒரு வதந்தி என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Twitter Post From, Vamsi Kaka, Through Sharath babu Siter, Dated May 03, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular