நடிகர் அஜித்குமார் ஜீப் ஓட்டியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் வீடியோ:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். ரசிகர்களால் ‘தல’ என்று அழைக்கப்படும் இவர் நடித்த வலிமை திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.
ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை (02/08/2021) இப்படத்திலிருந்து ‘நாங்க வேற மாறி’ எனும் பாடல் வெளியாகியது. அடுத்தடுத்த நடந்த இந்த விஷயங்களால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்து வருகின்றனர். பாடல் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்குமார் ஜீப்பில் ஸ்டண்ட் செய்ததாக வீடியோ ஒன்று தற்சமயம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த நியூஸ்கார்டின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுகுறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
நடிகர் அஜித்குமார் ஜீப் ஓட்டியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம். நம் தேடலில் வைரலாகும் வீடியோவில் இருப்பவர் நடிகர் அஜித் குமார் அல்ல என்பது நமக்கு தெரிய வந்தது.
உண்மையில் அவ்வீடியோவில் இருப்பவர் கேரளாவைச் சார்ந்த சாம் குரியன் களரிக்கல் என்பவர் ஆவார். இவர் கடந்த மாதம் 13 ஆம் தேதி (ஜூலை 13) அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீப் ஓட்டும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவே நடிகர் அஜித் ஜீப் ஓட்டியதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

இவர் பார்ப்பதற்கு ஒரு சாயலில் அஜித் குமார் போல் இருப்பதாலேயே இக்குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Also Read: அமைச்சர் ராஜகண்ணப்பன் விசிக தலைவர் திருமாவளவனை பழைய சேர் ஒன்றில் அமரச்செய்தாரா? உண்மை என்ன?
Conclusion
நடிகர் அஜித்குமார் ஜீப் ஓட்டியதாக சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தவறானது என்பதையும், உண்மையில் அவீடியோவில் இருந்தவர் அஜித் குமார் அல்ல என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)