வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

HomeFact Checkவாரணாசி மெட்ரோ ரயில் நிலையம் என்று பரவும் AI உருவாக்க புகைப்படம்!

வாரணாசி மெட்ரோ ரயில் நிலையம் என்று பரவும் AI உருவாக்க புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இது கோயில் கிடையாதுங்க! பனாரஸ் மெட்ரோ நிலையம்

Fact: வைரலாகும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.

வாரணாசி மெட்ரோ ரயில் நிலையம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”இது கோயில் கிடையாதுங்க! பனாரஸ் மெட்ரோ நிலையம்” என்பதாக இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

வாரணாசி மெட்ரோ ரயில் நிலையம்
Screenshot from Facebook/Kavitha Suresh

Facebook Link

Screenshot from Facebook/kulasai.athithan.kandaswamy

Facebook Link

Screenshot from Facebook/BJP4Avinasi

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கோவிலில் குண்டு வைக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check/Verification

வாரணாசி மெட்ரோ ரயில் நிலையம் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அமர் என்கிற X பயனாளர் இந்த புகைப்படம் உட்பட பல்வேறு ரயில் நிலைய புகைப்படங்களை AI மூலமாக உருவாக்கி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனை உறுதி செய்ய அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இவை AI மூலமாக நான் மாதிரியாக உருவாக்கிய புகைப்படங்கள்” என்று உறுதியளித்தார்.

எனவே, வாரணாசி ரயில் நிலையம் என்பதாக பரவும் புகைப்படங்கள் AI மூலமாக உருவாக்கப்பட்டவை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Also Read: பங்காரு அடிகளாருக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் மறுத்ததா?

Conclusion

வாரணாசி மெட்ரோ ரயில் நிலையம் என்று பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X Post from, Amar, Dated October 21, 2023
Self Analysis

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular