Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மயில் ஒன்று முருகன் உருவத்தை தத்ரூபமாக வரைவதாகப் பரவும் வீடியோ
வைரலாகும் வீடியோ AI மூலமாக எடிட் செய்யப்பட்டதாகும்.
மயில் ஒன்று முருகன் உருவத்தை தத்ரூபமாக வரைவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”மயில் எப்படி முருகன் உருவம். வரையுது பாருங்க.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இறந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
மயில் ஒன்று முருகன் உருவத்தை தத்ரூபமாக வரைவதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை ஆராய்ந்தபோது அதில் Ramesh Studios என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் லோகோ இடம்பெற்றிருந்தது. எனவே, அக்குறிப்பிட்ட சமூக வலைத்தளப்பக்கத்தை நாம் ஆராய்ந்தோம்.
அப்போது, அவருடைய பக்கத்தில் கடந்த மே 12, 2025 அன்று ”Mayil’s Arpanam to Murugan” என்று இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. Rames Harikrishnasamy என்கிற இவர் ஒரு போட்டோஷாப் வரைகலைஞர் ஆவார்.
மேலும், இவருடைய பக்கத்தில் முருகன் தொடர்பான பல்வேறு AI வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, வரைகலை தொடர்பான பயிற்சியையும் இவர் அளித்து வருகிறார். அவரது இந்த வீடியோவே முருகன் படத்தை வரையும் மயில் என்று பரவுகிறது.
Also Read: இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
மயில் ஒன்று முருகன் உருவத்தை தத்ரூபமாக வரைவதாகப் பரவும் வீடியோ AI மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Video From, Rames Studios, Dated May 12, 2025
Rames Studios
Ramkumar Kaliamurthy
April 23, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 19, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 26, 2025