Fact Check
KFC சிக்கன் தயாரிக்கப்படுவது இப்படித்தான் என்று பரவும் வீடியோ உண்மையா?
Claim
KFC சிக்கன் தயாரிக்கப்படுவது இப்படித்தான்
Fact
வைரலாகும் வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
KFC சிக்கன் தயாரிக்கப்படும் முறை என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”நம்ம KFC சிக்கன் அயிட்டங்கள் எப்படி தயாராகின்றன பாருங்கள்…!
நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி இது கறிமூலம்…!” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக வலைத்தளங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தீர்த்தவாரி நிகழ்ச்சி செய்யக்கூடாது என்று தடுத்த காவலரை கோவில் யானை தூக்கி எறிந்ததா?
Fact Check/Verification
KFC சிக்கன் தயாரிக்கப்படுவது இப்படித்தான் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் Ultra Process என்கிற பெயர் இடம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து அக்குறிப்பிட்ட சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம். அதில், இந்த வீடியோ மட்டுமின்றி இதே போன்று பல்வேறு வீடியோக்கள் இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து, இந்த வீடியோவை செயற்கை நுண்ணறிவு படைப்புகளைக் கண்டறியும் Hive Moderation Tool மூலமாக ஆராய்ந்தபோது இந்த வீடியோ 82.6% AIயால் உருவாக்கப்பட்டுள்ளதாக நமக்கு உறுதியாகியது.

மேலும், Sight Engine Tool மூலமாகவும் இந்த வீடியோ காட்சிகள் AI மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்குத் தெளிவாகியது. இந்த வீடியோவே KFCயில் சிக்கன் தயாரிக்கப்படும் முறை என்று பரப்பப்படுகிறது.

Also Read: அஇஅதிமுக 142 இடங்களை பிடிக்கும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
Conclusion
KFC சிக்கன் தயாரிக்கப்படுவது இப்படித்தான் என்று பரவும் வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையானது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Ultra Process Facebook Page
Hive Moderation Tool
Sight Engine Tool