Fact Check
மனித முகத்துடன் கராஞ்சியின் சம்சாரா ஏரியில் காணப்படும் மீன்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Claim: மனித முகத்தை ஒத்த விசித்திரமான மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டது!இது நீர்வாழ் ஆராய்ச்சி விஞ்ஞானிகளை குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது
Fact: வைரலாகும் வீடியோ AI மூலமாக கிராபிக்ஸ் வீடியோக்களை உருவாக்கும் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டதாகும்.
மனித முகத்துடன் கராஞ்சியின் சம்சாரா ஏரியில் காணப்படும் மீன்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“கராஞ்சியின் தனிமைப்படுத்தப்பட்ட வெப்பமண்டலப் பகுதியில் நைல் நதியின் வெப்பமண்டல ஆதாரங்களின் ஏரிகளில் ஒன்றான சம்சாரா ஏரி உள்ளது. சமீபத்தில், மனித முகத்தை ஒத்த விசித்திரமான மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டது!இது நீர்வாழ் ஆராய்ச்சி விஞ்ஞானிகளை குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது” என்று இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்றாரா அண்ணாமலை?
Fact Check/Verification
மனித முகத்துடன் கராஞ்சியின் சம்சாரா ஏரியில் காணப்படும் மீன்கள் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோ குறித்து ஆராய்ந்தபோது அந்த வீடியோவானது முதலில் Headtap videos என்கிற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை நம்மால் அறிய முடிந்தது. இந்த யூடியூப் பக்கத்தைப் பற்றிய அவர்களது குறிப்பிலேயே “ Experiments in video and Graphics ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித முகத்துடனான மீன்கள் மட்டுமின்றி Lake samsara என்கிற கற்பனையான நீர்வாழிடத்தை உருவாக்கி அதில் வித்தியாசமான கண்ணுடைய செடிகள், மனித முகமுடைய மீன்கள் என்றெல்லாம் கற்பனைக்கதைகளுடனான அனிமேஷன் வீடியோக்கள் இந்த பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
இது உறுதியாகியபோது, நைல் நதிக்கு அருகில் கராஞ்சியில் அமைந்துள்ள சம்சாரா ஏரி என்று பரவும் தகவல் குறித்தும் ஆராய்ந்தோம். அதில், கராஞ்சி என்கிற பெயரிலேயே ஏரி ஒன்று கர்நாடகாவில் இருக்கிறது என்பதும், ஆனால், ஆப்ரிக்காவின் நைல் நதிக்கு அருகில் கராஞ்சி என்கிற பிரதேசமோ அதில் சம்சாரா என்கிற ஏரியோ இல்லை என்பதும்; நைல் நதிக்கும் கராஞ்சி ஏரிக்கும் தொடர்பில்லை என்பதும் நமக்கு உறுதியாகியது.
மேலும், Hive moderator மூலமாக குறிப்பிட்ட வீடியோவில் இடம்பெற்றுள்ள மனித முகமுடைய மீன்களின் உருவங்களை ஆய்வு செய்தபோது அவை 98.8%-99.7% வரையில் AI மூலமாக உருவாக்கப்பட்டவை என்பதற்கான தரவுகள் நமக்குக் கிடைத்தன. எனவே, வைரலாகும் வீடியோ தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.


Also Read: விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக பரவும் எடிட் படம்!
Conclusion
மனித முகத்துடன் கராஞ்சியின் சம்சாரா ஏரியில் காணப்படும் மீன்கள் என்று பரவும் வீடியோ AI மூலமாக என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Hive Moderator, AI-generated content detection tool
Youtube video, Headtap Videos, January 18, 2024
(இதுகுறித்து நம்முடைய நியூஸ்செக்கர் ஆங்கிலத்திலும் உண்மையறியும் சோதனை வெளியாகியுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)