மோடி பேசினால் அமெரிக்கா கேட்கும்; அமெரிக்கர்களுக்கு இந்தி தெரியாததால் பேசியும் பயனில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“பிரதமர் மோடி உரக்கப் பேசினால் அமெரிக்கா வரை கேட்கும். ஆனால் அமெரிக்கர்களுக்கு இந்தி தெரியாது என்பதால் பேசியும் பயனில்லாத நிலை உள்ளது” என்று என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


Also Read: இலங்கை அரசை எதிர்த்து புத்த துறவி தீக்குளித்ததாக பரவும் பழைய வீடியோ!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மோடி பேசினால் அமெரிக்கா கேட்கும்; அமெரிக்கர்களுக்கு இந்தி தெரியாததால் பேசியும் பயனில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இதில் “இலங்கைக்கு இதுவரை ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் இந்தியா உதவி செய்துள்ளது. பிரதமர் மோடி உரக்க பேசினால் அமெரிக்காவே கேட்கும் என்று சென்னையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக தந்தி தொலைக்காட்சி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனைத் தொடர்ந்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையைச் சார்ந்த வினோத் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டதில், இது பொய்யான நியூஸ்கார்ட் என்பதை அவரும் உறுதி செய்தார்.
இதனையடுத்து தமிழக பாஜகவின் சமூக ஊடகத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். இத்தகவல் தவறானது என்று அவர் பதிலளித்தார்.
Also Read: பொருளாதார விலையுயர்வு சூழலில் மக்கள் கீதா சாரத்தை பின்பற்ற வேண்டும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
Conclusion
மோடி பேசினால் அமெரிக்கா கேட்கும்; அமெரிக்கர்களுக்கு இந்தி தெரியாததால் பேசியும் பயனில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: Altered Image/Manipulated Media
Source
Tweet, Thanthi TV, Thread on Dated May 14, 2022
Conversations with CTR Nirmalkumar, BJP President, IT Wing
Conversation with Vinoth, Digital Team, Thanthi Tv
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)