Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நடப்பு சூழல் காரணமாக இலங்கை அரசை எதிர்த்து புத்த துறவி ஒருவர் தீக்குளித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. இக்கலவரம் காரணமாக இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜ்பக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், ராஜபக்சேவின் வீடு எரிக்கப்பட்டுள்ளது, அவரது தந்தையின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசை எதிர்த்து புத்த துறவி ஒருவர் தீக்குளித்து தற்கொலையில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Also Read: இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றாரா மகிந்த ராஜபக்சே?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
இலங்கை அரசை எதிர்த்து புத்த துறவி ஒருவர் தீக்குளித்ததாக வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அவ்வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் வீடியோ 9 ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது.
இறைச்சிக்காக ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்று கூறி 2013 ஆம் ஆண்டு புத்த துறவி ஒருவர் இலங்கையின் கண்டிதலா என்ற இடத்தில் தீக்குளித்தார். இந்த தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே இலங்கையின் தற்கால சூழலோடு தொடர்புப்படுத்தி தற்சமயம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
புத்த மத துறவி தற்கொலை செய்துகொண்ட இந்த நிகழ்வு குறித்து அச்சமயம் பல ஊடகங்களில் செய்தி வந்திருந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: ஏழை மாணவர்களுக்கு இலவசப் பள்ளி புத்தகம் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்துவதாக பரவும் பொய் தகவல்!
நடப்பு சூழல் காரணமாக இலங்கை அரசை எதிர்த்து புத்த துறவி ஒருவர் தீக்குளித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ 9 வருடங்களுக்கு முந்திய பழைய வீடியோவாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Source
Metatube Video, Dated July 17, 2013
Articles Published in The Hindu, Dated May 24, 2013
Articles Published in The Indian Express, Dated May 26, 2013
Articles Published in Times of India, Dated May 26, 2013
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 5, 2022
Ramkumar Kaliamurthy
March 25, 2022
Vijayalakshmi Balasubramaniyan
March 16, 2023