Fact Check
மத்திய அரசு எனக்கு பயந்தே முன்கூட்டியே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளது என்றாரா அன்புமணி ராமதாஸ்?

மத்திய அரசு எனக்கு பயந்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளது என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஒன்றிய அரசு வெளியிட்ட வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், நவம்பர் 19 ஆம் தேதியன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், “நாடாளுமன்றத்தில் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நான் எதிர்த்து குரலெழுப்ப இருப்பதை அறிந்துகொண்ட மத்திய அரசு எனக்கு பயந்து முன்கூட்டியே வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றிருக்கிறது” என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கையில் கட்டுடன் வைரலான பாஜக நிர்வாகி சுமதி இஸ்லாமியப் பெண் வேடமிட்டாரா? உண்மை என்ன?
Fact check/ Verification
மத்திய அரசு, நான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்த்து குரலெழுப்புவேன் என்று பயந்தே வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற்றுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட செய்தி முன்னணி இணையதளங்களில் வெளியாகியுள்ளதா என்று தேடியதில் அதுபோன்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. மேலும், தந்தி டிவியின் எழுத்துருவுக்கும் வைரல் கார்டு எழுத்துக்களும் வித்தியாசமாக இருந்தது.
தொடர்ந்து, தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆராய்ந்தபோது “ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை சாதி பிரச்சினையோ அரசியல் பிரச்சினையோ அல்ல; இது ஒரு சமூக பிரச்சினை-பாரதிராஜாவுக்கு அன்புமணி கடிதம்” என்று வெளியாகியிருந்த நியூஸ் கார்டினை எடிட் செய்தே வைரல் நியூஸ் கார்டினை போலியாக உருவாக்கியிருப்பது தெரிய வந்தது.
இதை நாம், தந்தி டிவியின் இணை ஆசிரியர் அசோக வர்ஷினியின் மூலமாக உறுதிப்படுத்திக் கொண்டோம். தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் தரப்பிலும் இதுகுறித்த விளக்கம் அறிய முயற்சித்து வருகிறோம்.
Conclusion:
மத்திய அரசு, நான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்த்து குரலெழுப்புவேன் என்று பயந்தே வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற்றுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)