Claim
பாமக தொண்டர்கள் ராமதாஸ் படத்துடன் ‘If you are Bad; I am your Dad’ என்கிற வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருந்தனர்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Fact
பாமக தொண்டர்கள் ராமதாஸ் படத்துடன் ‘If you are Bad; I am your Dad’ என்கிற வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருந்ததாக பரப்பப்படும் படத்தில் தொண்டர் ஒருவரின் விரல் அழிக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதையடுத்து வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்து தேடுகையில் சுரேஷ் காங்கேயன் என்பவரின் எக்ஸ் பக்கத்தில் “பூம்புகார் மாநாட்டு திடலில் மாவீரன் காடுவெட்டியார் புகைப்படத்தை கையில் ஏந்திய நம் இளைஞர்கள்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
அப்படத்தில் பாமகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்த மறைந்த காடுவெட்டி குரு என்கிற குருநாதனின் படத்தையுடைய பதாகையை அத்தொண்டர்கள் ஏந்தி இருப்பதை காண முடிந்தது.

Also Read: பத்திரிக்கையாளரை இரண்டு போலீசார் அடித்துக் கொன்றதாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?
மேற்கண்ட பதிவு தவிர்த்து வேறு சிலரும் இதே படத்தை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. அப்பதிவுகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இப்படத்தை வைரலாகும் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என உறுதியானது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.


Sources
X post from ther user, @SureshKangayan, dated August 10, 2025
Self Analysis