Claim: வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதாக பரவும் வீடியோ.
Fact: இத்தகவல் தவறானதாகும். அக்கோவில் 2 ஆண்டுகளுக்கு முன், 2022 ஆம் ஆண்டிலேயே இடிக்கப்பட்டுவிட்டது.
“தேர்தல் நேரத்தில் கூட திராவிடத்தின் இந்து விரோத ஆணவம் – வன்மம் அடங்கவில்லை. இவர்களை புறக்கணித்து பாஜகவிற்கு வாக்களித்து இவர்களுக்கு பாடம் புகட்டுவோம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அவ்வீடியோவில் முடிச்சூர் வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

