Friday, February 14, 2025

Fact Check

‘360 டிகிரி கூமுட்டை’… வைரலாகும் படத்தின் பின்னணி என்ன?

banner_image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 360 டிகிரி கூமுட்டை என்ற எழுதப்பட்டிருந்த பெயர் பலகை முன் நிற்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அண்ணாமலை 360 டிகிரி கூமுட்டை என்ற எழுதப்பட்டிருந்த பெயர் பலகை முன் நிற்பதாக பரவும் புகைப்படம்

பிரதமர் மோடி அவர்கள் கடந்த வியாழனன்று  (மே 26)  பலவேறு நலப்பணிகளை தொடங்கி வைக்க சென்னை வந்தார். இந்நிகழ்வின்போது தமிழக முதல்வர் ஆற்றிய உரையை அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்தின்போது, “திமுகவுக்கும் பாஜகவுக்கும் 360 டிகிரி கொள்கை அடிப்படையில் வேறுபாடு உள்ளது” என்று அண்ணாமலை கூறிய வாசகம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை 360 டிகிரி கூமுட்டை என்ற எழுதப்பட்டிருந்த பெயர் பலகை முன் நிற்பதாக பரவும் புகைப்படம் - 1

Twitter Link | Archive Link

அண்ணாமலை 360 டிகிரி கூமுட்டை என்ற எழுதப்பட்டிருந்த பெயர் பலகை முன் நிற்பதாக பரவும் புகைப்படம் - 2

Facebook Link

அண்ணாமலை 360 டிகிரி கூமுட்டை என்ற எழுதப்பட்டிருந்த பெயர் பலகை முன் நிற்பதாக பரவும் புகைப்படம் - 3

Facebook Link


Also Read:
 குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அவமதித்தாரா ஜோ பைடன்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

இந்த நிலையில் 360 டிகிரி கூமுட்டை என்ற எழுதப்பட்டிருந்த பெயர் பலகை முன் அண்ணாமலை நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 360 டிகிரி கூமுட்டை என்ற எழுதப்பட்டிருந்த பெயர் பலகை முன் நிற்பதாக புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அப்படத்தின் உண்மை பின்னணி அறிய, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

அண்ணாமலை அவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று ( மே 28) சாவர்க்கர் பிறந்த தினத்தில் அவரது டிவிட்டர் பக்கத்தில் சில படங்களை பகிர்ந்து, “சமீபத்தில் அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையில் அவர் தனிமையில் அடைக்கப்பட்டிருந்த அதே அறைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எந்த ஒரு மனிதனும் நம் தேசத்துக்காக அனுபவித்திராத கொடூரத்தை அவர் அனுபவித்துள்ளார். தற்கால மற்றும் வருங்கால சந்ததியினர் சாவர்க்கர் குறித்து அதிகம் படித்து, வரலாற்றையும் வீர சாவர்க்கரின் உண்மை ஆன்மாவையும் போற்ற வேண்டும்” என்று பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Archive Link

இப்பதிவுடன் பகிரப்பட்ட படங்களில் ஒன்றை எடிட் செய்தே மேற்கண்ட வைரலாகும் படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

comparison image

Also Read: இஸ்லாமிய மத உடை அணிந்து கேரள அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

Conclusion

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 360 டிகிரி கூமுட்டை என்ற எழுதப்பட்டிருந்த பெயர் பலகை முன் நிற்பதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Altered Image/Manupulated Media

Sources

Annamalai, Tamilnadu BJP President, tweet on May 28, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
ஒரு கூற்றின் உண்மைதன்மையைச் சரிபார்க்க, கருத்துக்களை வழங்க அல்லது புகார் செய்ய விரும்பினால், எங்களை வாட்ஸ்அப் செய்யவும் 9999499044 அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் checkthis@newschecker.in​. நீங்கள் எங்கும் தொடர்பு கொள்ள முடியும் மற்றும் படிவம் நிரப்ப முடியும்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,123

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage