ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதமிழக ஊடகங்களை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்றாரா அண்ணாமலை?

தமிழக ஊடகங்களை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்றாரா அண்ணாமலை?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

தமிழக ஊடகங்கள் அனைத்தையும் வட இந்திய ஊடகங்களைப் போல எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமிழக
Source: Facebook

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குறித்த சர்ச்சைக் கருத்துக்களும், செய்திகளும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வலம் வரும். அவ்வகையில் தற்போது, “எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம். வட இந்திய ஊடகங்களை போல தமிழக ஊடகங்களையும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம். தமிழக ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவாக பொய் செய்திகளை வெளியிடாமல் உண்மை செய்திகளை வெளியிடுவது கண்டிக்க தக்கது.” என்று அவர் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழக
Source: Facebook

Facebook Link

Source: Twitter
Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு என்று அறிவிப்பு வெளியிட்டதா தமிழ்நாடு அரசு?

Fact check/Verification

தமிழக ஊடகங்கள் அனைத்தையும் வட இந்திய ஊடகங்களைப் போல எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட நியூஸ் கார்டு ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்தது போல பரவி வருவதால் விகடனின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் அப்படி ஏதும் கார்டு பகிரப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தோம்.

அப்போது, ’’மீன் சாப்பிடுவர்கள் யாரும் இந்துக்கள் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாஅ பரவும் தகவல் தவறு. கோயில் வருமானங்கள் மூலம் மீன் மார்க்கெட் கட்டப்படும் என்ற இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்புக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து “மீன் சந்தையை கட்டிக் கொடுப்பது அரசின் வேலையா, திருக்கோயில்களில் வேலையா”? என்றே கேள்வி எழுப்பியுருக்கிறார் என்று தெரிய வருகிறது” என்கிற நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனையே எடிட் செய்து ஊடகங்கள் குறித்து அண்ணாமலை பேசியதாக பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து, அண்ணாமலை அவர்களின் செயலாளர் பிரபாகரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலி என்றும், ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் இவ்வாறு எப்படி சொல்லுவார்; குறிப்பிட்ட செய்தி அண்ணாமலை குறித்து தவறாக பரப்பப்படுகிறது என்றும் உறுதி செய்தார்.

தமிழக

Fake

தமிழக

ORIGINAL

தொடர்ந்து, இதுகுறித்து விகடன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசியபோது குறிப்பிட்ட நியூஸ் கார்டு எடிட் செய்து பரப்பப்படுகிறது என்பதை உறுதி செய்தனர்.

Conclusion

தமிழக ஊடகங்கள் அனைத்தையும் வட இந்திய ஊடகங்களைப் போல எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Annamalai, BJP president team

Vikatan

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular